உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 24

நாற்காலிகள்,பெட்டிகள், ஏணிகள், விட்டம், வரிச் சுல்கள் யாவும்- அவனால் உலோகப் உலோகப் புடங்களுக்காக எரிக்கப்பட்டு வந்தன.

கருமான் வந்த செய்தி கூறவே, சித்தன் சுழல் துப்பாக்கி ஒன்றை எடுத்துவந்தான். அவன் அதற்கு ஆறு ஆங்கிலப் பொன்விலை கூறினான். கருமான் குறைத்துக் கேட்டும் அவன் இணங்கவில்லை. ஆனால் குளூபின் பேசாது அவனிடம் அவன் கேட்ட ஆறு பொன் கொடுத்துவிட்டு மீண்டாள்.

பேயடைந்த மாடம் பிளீன்மாண்ட்

கெர்ஸ்னி ஒரு முக்கோண வடிவுள்ள தீவு. மூன்று மூலைகளிலும் நிலமுனை ஒவ்வொரு நில மூக்காக நீண்டிருந்தது. L டார்டிவல் இம் மூலைகளில் ஒன்று. குளூபின், பிறந்து வாழ்ந்த இடம் இதுவே. இந்த இடம் கள்ள வாணிகக்காரருக்கு ஒரு சந்திப்பாகவும் அமைந்தது. அதற்கு வேண்டிய பல வசதிகளும் அங்கே இருந்தன.

நிலமூக்கின் கோடியில் ஒரு அழகிய மாடம் இருந்தது. அது ஒரு சிறுகுடும்பம் வாழத்தக்கதாய் அந்தசந்தாயிருந்தது. அதன் மூன்றுபுறம் கடல். மறுபுறம் ஒரு தோட்டப்பகுதி.தோட்டப்பகுதி பாழாய்க் கிடந்தது. மாடமும் பாழாகவே கிடந்தது. கடற்புரத்திலுள்ள மூன்று மதில்களில் ஒரு மதிலில் கதவோ சாளரமோ எதுவும் இல்லை. முன்னாலுள்ள கதவும் சாளரங்களும் செங்கலால் அடைபட்டிருந்தன. மற்ற ஒரு பக்கத்தில் இரண்டு சாளரங்கள் இதுபோலவே செங்கலால் அடைபட்டிருந்தன. ஒரே ஒரு பக்கம், தென்புறம் மட்டும் பலகணிகளில் கதவுகள் அகற்றப்பட்டுத திறந்தமேனியாய் இருந்தன.

கிட்டத்தட்ட மாடத்தின் நாற்புறமும் கடல் இருந்தது. வேலி இறக்கத்தின்போது மட்டுந்தான் ஒரு சிறு இடைவழி இடுக்கு அதை நிலத்துடன் இணைத்தது.

இம்மாடத்தின் பெயர் பிளீன்மாண்ட். யாரும் அதன் பக்கம் நாடு வதில்லை- அதன் பெயர்கூடக் கூறுவதில்லை. ஏனென்றால் அதில் பட்டப் பகலில்கூடப் பேய்கள் நடமாடிய தென்று மக்கள் நம்பினர்.