உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

85

சீதையைக் காணச்சென்றாள். பேச்சினிடையே பேச்சாக அவள் சீதையின் பழங்கதை முற்றிலும் வருவித்தாள். சீதை தன் குழந்தை பேயிடம் சென்றுவிட்டதென்ற கதையை நம்பவில்லை என்றும் அது எங்கோ வளர்ந்து வருவது உறுதி என்றும் கூறினாள். மருத்துவமாது உடனே பக்குவமாக 'நீ சொல்வதில் உண்மை நிறைய இருக்கிறது அம்மா. எனக்குத் தொலைவிடத்தில் ஓர் உறவினர் இருக்கிறார். அங்கே நாலைந்து வயதுடைய பிள்ளை ஒன்று இருந்தது. அது யாராலோ அவ்விடத்தில் தனியாக விடப்பட்டதாம். உன்பிள்ளையும் அதுபோல எங்காவது வளர்ந்து வரக்கூடும்' என்றாள்.

அதன்பின் அவள் ஏதோ நினைத்தவள் போல "அம்மா, நான் ஒன்று கேட்கிறேன், உன் பிள்ளையை இத்தனை ஆண்டு கள் கழித்து எங்காவது பார்த்தால் உனக்கு அடையாளம் தெரியுமா?” என்று கேட்டாள்.

சீதை உடனே முகமலர்ச்சியுடன் ‘அந்த நல்ல காலம் வருமானால் ஏன் எனக்குத் தெரியாது? தாய் அறியாத சூலா? என் பிள்ளைக்கு வலது காதின் கீழ் மறுவுண்டு. வலதுகையின் கீழும் ன்னொரு மறுவுண்டு' என்றாள் அவள். மாமி வடையாளங்கள் தனக்கும் தெரியும் என்றாள்.

வ்

மருத்துவமாது 'அப்படியானால் நான் என் உறவினர் வீட்டுப்பிள்ளையையும் அம்மாதிரி வேறெங்கேனும் எடுப்புப் பிள்ளைகள் இருந்தால் அவற்றையும் இவ்வடையாளங்களால் சோதித்தறிவேன். உங்களிடம் தவறாக நம்பிக்கை உண்டுபண்ண நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒன்று என் மனத்திற்குள் கூறுகிறது, நான் உங்கள் பிள்ளையைக் கண்டுபிடிப்பேன் என்று' என்றாள்.

பழைய வருத்தமும் கவலையும் மாறி மறதியிலாழ்ந்திருந்த சீதையின் தாயுள்ளம் நம்பிக்கை என்னும் நிலவொளி கண்டு மீண்டும் ஊசலாடிற்று.

ஒரு சில நாட்களில் அம்மாது மீண்டும் பிள்ளையுடன் வந்தாள். தாயும் பாட்டியும் உடனே அதனைத் தம் பிள்ளை யெனக் கண்டு இன்பக் கண்ணீரால் அவனை ஆட்டினர். பிள்ளையும் இரண்டாம் தடவை தன் பெற்றோரை மறந்து,