உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114 ||-

அப்பாத்துரையம் - 25

குளம் ஒன்று உண்டு. அதுவும் நீ குளிப்பதற் குரியதன்று. ஆனால் இதோ இந்தச் சுரங்க வழியில் சென்றால், அங்கே ஒரு குளம் இருக்கிறது. அதில் முதலை, பாம்புகள், அட்டைகள் நிறைந் திருக்கும். உனக்குத் துணிவு இருந்தால் அதில் சென்று குளிக்க

லாம்.

விசய: விசயரங்கனுக்கு எதிலும் துணிவு வராதிருந்தது கிடையாது.

குருக்கள்: ஆ, விசயரங்கனா நீ, அந்த அதமச்சண்டாளன் ஆதிரங்கன் கொள்ளுப்பேரனா? சரி, சரி. உன்னைத் தூய்மைப் படுத்தத்தக்க தீர்த்தமொன்று வேறே இருக்கிறதா? உன் குருதி யன்றி வேறெதுவும் உன்னைத் தூய்மைப்படுத்தாது.

விசய: அப்படியானால் நான் இப்போதே தூய்மை யுடையவன் தான். காட்டுவிலங்குகளுடன் வழியில் போராடி என் உடலெல்லாம் குருதி தோய்ந்துதானிருக்கிறது.

குருக்கள்: அதை நான் மறந்துவிட்டேன். இந்தக் காட்டைக் கடந்து யாரும் உயிருடன் வரமுடியாது. நீ ஒரு வீரன்தான். ஆனால் நீ எதற்காக இவ்வளவு வருந்தி இங்கே வந்தாய்? இன்னும் ஏதாவது கோயிலில் இருந்தால் திருடவோ கொள்ளை யிடவோ செய்யலாமென்றா?

விசய: சிவசிவ! ஒருநாளுமில்லை. முன்னோர் பழிகளுக் கான கழுவாய் தேடி நோன்பு செய்து தங்கள் பழியை அகற்றும் படி தங்களைக் கோருவதற்காகவே வந்தேன்.

குருக்கள் முகம் சீற்றத்தால் முதலில் சிவந்து பின் கடுகடுத்துக் கறுத்தது. அவன் விசயரங்கனைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொண்டு "நீ வந்த காரியம் வீண்; உடனே ஓடிப்போ” என்று கூறி விட்டுக் கோயிலுள் சென்று கதவைத் தடாலென மூடிக்கொண்டான்.

விசயரங்கன் மனந்தளராமல் தான் வந்த காரியத்தை எப்படியும் முடிக்கும் உறுதியுடன் குருக்கள் காட்டிய முதலைக் குளத்துக்குச் சென்றான். முதலைகள் பிடியில் அகப்படாமல் ஓடியும் போராடியும் பின்னும் உடம்பில் பல காயங்களுடன் அவன் குளித்தெழுந்தான். அட்டைகள் அவன் உடலின் குருதியை உறிஞ்சின. சோர்ந்த உடலுடனும் ஒரு காரியம்