(186) ||___
அப்பாத்துரையம் - 25
பிறந்துதான் நம் நாடு குட்டிச்சுவராய்ப் போகிறது" என்று வாய்விட்டுக் கூறி விட்டாள். அரசியல் மேடைகளைச் சுற்றி நின்று நாட்டு நிலைகளைப்பற்றி அறிந்த அம்பி அவள் 'அறியாமை' கண்டு இரங்கினான். “அட பைத்தியமே, இந்த வறுமைப் பேய்கள் பெருகியிருப்பதனால்தான் நம் நாட்டுக்கு இன்னும் இவ்வளவாவது வாழ்விருக்கிறது. இவர்களால் இந்நாட்டில் வறுமை ஒருபுறமும், மக்கள் நெருக்கம் ஒருபுறமும் மிகுந்திராவிட்டால், இதற்குள் வெள்ளையர் இங்கே குடியேறி நம் தர்மத்தை அழித்திருப்பார்கள். அது மட்டுமா? பிள்ளை பெறுவதைத் தடுக்கவேண்டும் என்று அவர்கள் நம்மை ஏய்ப்பதற்காகவே கூறுகிறார்கள். கர்பத்தடைப் பாசாங்குகள் ஒருபுறமிருக்கும்போதே முன்பு உலகில் கால்பங்கு மக்கள் தொகையினராயிருந்த அவர்கள் இப்போது பாதித்தொகையின ராய் விட்டனர் உலகின் முக்கால் பங்குப் பகுதியிலும் குடியேறி அந்நாட்டு வாழ்வுகளை அழித்தும் விட்டனர். கடவுள் வறுமையையும் மக்கட் பெருக்கத்தையும் நம் நாட்டு நன்மைக்கே தந்திருக்கிறார்”
பார்வதி: நம்மைப் பட்டினி கிடக்கச் செய்யும் நாட்டைப் பற்றி நமக்கென்ன கவலை வேண்டியிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. வறுமையில் கிடந்து உழன்று நம் தர்மம் வாழ் வதைவிட, நாம் நல்வாழ்வுடன் ஒரு சிலராய் வாழ்ந்து வெளி நாட்டாருக்கு இடம் கொடுத்தால்தான் என்ன கெட்டு விட்டது? நம் தர்மத்தை வைத்துக்கொண்டு நாம் இப்படி வாழ்வதைவிட, வேறு எந்தத் தர்மமாவது வந்து வாழ்ந்து விட்டால்தான் என்ன?
அம்பி: அதெல்லாம் எப்படியாவது போகட்டும். நம்மா லியன்ற அளவு நம் நாட்டுக்கு நாம் நன்மை செய்வோம். மீதி, தெய்வச் செயல்.
பாரு : நம் சேவையும் யாரும் பாராட்டத்தக்க தென்று எனக்குப் படவில்லை. அப்படிப் பார்த்தாலும் பதினான் கு பிள்ளையைப் பெற்று ஆறைப் புதைத்து வருவதைவிட, எட்டுப் பிள்ளைகளை மட்டுமே பெற்று வாழவைத்தால் நல்லதாயிற்றே. அந்த ஆறு பிறக்காதிருந்தால் மற்ற எட்டுக்கும் சற்றுக் கூடுதல் உணவாவது கிடைக்குமே.