இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்மேல்தான் வீழ்வேன்!
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் ! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்ப்பொருட்டே ஆவேன் ! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிரு கூறாய்ப் போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெலாம் அதுவே !
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு - 2
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்.
61060T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654