உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

சார்ந்து செய்தி கோருவோம் எழுவீர்” என்றான்

மண்டியிட்டுத் தந்திரியார்

கெஞ்சு கின்றார்:

வா மொன்று தரவேண்டும்

மன்னர் மன்னா

கண்டொத்தமொழியாள் எம்

அரசி என்ன

சொன்னாலும் கொற்றவனே

கோபம் வேண்டாம்.

அப்பாத்துரையம் - 25

(தன்னதா)

(தன்னதா)

பாடியவர் வேறு யாருமில்லை; வழியில் முந்திச் சென்று மறைந்த கிழவர்தான். இளைஞர் மங்கையர் சிறுவர் பலர் பாடியும் அவர்கள் குரல் கடந்து அவர் குரலும் முழக் கொட்டும் எக்களிப்பும் கேட்டன. குறுக்கு நெடுக்காக வில்போல் வளைந்து, பாம்புபோல நெளிந்து சென்ற அவர் உடலின்மீது செவ்வொளி படர்ந்தது. அதன் நரம்புகள் வில்நாண்போல் அதிர்வுற்றன. முகத்தின் குறும்புநகை ஒளி விளக்கத்துடன் மல்லாடிற்று. இக்காட்சி கிழவன்மீது காவிக்காரனுக்கிருந்த பழைய கடுகடுப்பைக்கூட மறக்கடித்தது.

சிறுவன் ஒருவன் கிழவனை இடித்துக்கொண்டு, முன் வந்து “காண்டில் தாத்தா, இன்று உனக்கென்ன இளமையே வந்து சற்று எட்டிப்பார்க்கிறதோ? ஏன், இன்னொரு தடவை மணம் செய்து கொள்ளேன்” என்றான்.

“பேசாதிரு, டிமதி” என்று கிழவன் கையமர்த்திய வண்ணம் மற்றொருவனை நோக்கி, “ஃவேர்வே, இதோ பார், நாம் அனைவரும் இப்போது வீடு சென்று வேறு ஆடை எடுத்துக் கொண்டு பேசாமடந்தைக்குச் செல்வோம். அவ்விடுதிக்காரப் புதுப்பணக்காரன் ஊராரை ஏய்த்துத் திருமணம்செய்து வருகிறானாம். போய் அவனுக்குத் திருமணக் கூத்தடித்து அவன் புட்டிகள் ஒன்றிரண்டைக் காலி செய்யலாம் வா" என்றான்.

“ஆம். அண்ணே, எல்லோரும் போகலாம்" என்றான் டிமதி.