தாயகத்தின் அழைப்பு
66
21
"மணம் செய்து கொள்கிறாயா இல்லையா? இரண்டிலொன்று கூறுக” என்றாள்.
"மணம் செய்துகொள்ளாவிட்டால்..."
66
66
அவளை மணக்க விரும்புவர் வேறு ஒருவர் இருக்கிறார்.”
‘அது யார்?”
“முன் அவளைக் காதலித்த ஒருவர்"
66
'அப்படி அவள் எதுவும் என்னிடம் கூறவில்லையே.' பெண்கள் இதையெல்லாமாக் கூறுவார்கள்?'
“சரி. அவரையே மணம் செய்விப்பதுதானே. என்னை ஏன் கேட்கவேண்டும்?"
66
“அவர்தான் அவளை விரும்புகிறார்; அவளல்ல” “அப்படி யானால் அவர் பெயரால் என்னை அச்சுறுத்துவானேன்?"
66
"நீங்கள் மறுத்தால், அவரை அவள் விரும்பும்படி நேரலாம். முன் மறுத்தவள் இப்போது மறுக்கமாட்டாள்.”
வில்டீவின் போட்டி வேட்டையும் வீம்பும் தணிந்தன. அடுத்தநாளே விடை தருவதாகக் கூறினான்.
அன்றே அவன் யூஸ்டேஷியாவிடம் போய் பேசினான். அவள் அன்று அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் படபடப்பும் ஆர்வமுனைப்பும் அவனைக் காட்டிக் கொடுத்தன. வேடன் ஒரு வேட்டையில் தோற்று மற்றொருபுறம் வருகிறான் என்பதை அவள் ஊகித்தாள். அவள் நயமான குறுக்குக் கேள்விகளால் அவன் வாயில் இருந்தே நிலையை முற்றிலும் வருவித்துவிட்டாள். இப்போது துருப்பு தன் கையில் என்று அவள் துணிவு காட்டினாள்.
அவள் மண உறுதி கேட்டாள். அவன் விளையாடினான். ஆர அமர ஒருவாரத் தவணை கோரினான்.
அவன் அவள் கரம்பற்றினான். அவள் விடுவித்துக் கொண்டு, "போய் வேறு வேலையில்லாவிட்டால் நாளை வந்து காத்திரு. நான் முன்பு காத்திருந்தேனல்லவா? அதுபோல்