தாயகத்தின் அழைப்பு
51
பேசியிருந்து அனுப்பிவிட்டு, மாமியை உள்ளே கணவன் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார் என்ற கருத்துடன் முன்கட்டுக்கு வந்தாள்.
ஆனால்
அந்தோ
கிளிம்
இன்னும்
தூங்கிக்
கொண்டிருக்கிறான்! கதவு இன்னும் சார்த்தப்பட்டே இருக்கிறது.
அவள் திறந்துபார்த்தாள் யாரையும் காணோம். அண்டை அயலில் பார்த்தாள், யாருமில்லை.
அவள் கலவரமடைந்தாள். ஆனால் செய்வதின்ன தென்றறி யாமல் சும்மாயிருந்தாள். கணவன் எழுந்தபோது கூட அவனிடம் சொல்லத்துணியவில்லை. பொய்மைப்பேய் அவளைப் பிடித்தது. ஆனால் ஏற்கனவே மாலையில் தாம்ஸினைக் காணச் செல்ல எண்ணிய கிளிம், இப்போது இருவரும் போகலாம் என்று அழைத்தான். அவள் நாளை போகலாம் என்று கடத்தினாள். அவன் தானே செல்வதாக வற்புறுத்திச் சென்றான். குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் அவள் வீட்டிலிருந்து குமுறினாள்.
திருமதி யோப்ரைட் அலுப்பாலும் தன்னைக்கண்டும் மருமகள் கதவு திறவாதிருந்தது கண்ட வெறுப்பாலும் குற்றுயிராய் நடந்தாள். அச்சமயமும் சூசன் குழந்தை ஒன்றுதான் அவளுக்குத் துணை. கடவுள்கூட அத்திக்கற்ற தாய்க்கு உதவ முன்வரவில்லை. அவள் நகர்ந்து நகர்ந்து வந்த வழிமீண்டாள். தட்டித்தடுமாறி விழுந்தாள். சூசன் குழந்தை குழந்தையாதலால் ஏதேதோ கேட்டது. அவள் மூளை குழம்பிற்று. காலில் ஏதோ குத்திற்று. அவள் சாய்ந்தாள். “என்மகன் எனக்கு உதவவில்லை. நான் சாகிறேன்" என்ற சொல் குழந்தை உள்ளத்தையும் உருக்கிற்று. "நான் என்ன செய்யவேண்டும் பாட்டி?” என்று கேட்டது. “அருகே உள்ள குட்டையில் நீர் நனைத்துவா” என்று கைக்குட்டையைக் கொடுத்தாள்.
குழந்தை வருவதற்குள் உயிர் நீங்கிற்று.
குழந்தை அச்சத்துடன் ஓடிற்று.
குழந்தையின் விளங்கா மழலைமொழி அருகில் பலரை ட்டுக்கொண்டு வந்தது.