உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

57

யூஸ்டேஷியாவினிடமாக அச்சிறுகுழந்தை அவள் சின்னமா யிருந்து அவனை ஊக்கிற்று.

டிக்கரி வாழ்க்கையின் கோடையில் முதிர்ந்து அதன் வேனிலில் மாறாது பொலிவுடன் தாம்ஸினுடன் வாழ்ந்தான்.

யூஸ்டேஷியாவிடம் மாறா அன்புடன் நடந்த சார்லிக்கு அவன் தலைமுடி ஒன்றைக் கிளிம் நினைவுக்குறியாய் தந்து மகிழ்வித்ததுடன் வாழ்க்கையில் அவனுக்குப் பல உதவிகள் செய்து ஊக்கினான்.

புதர்நிலமக்கள், பல மாறுதல்களைக் கண்ட புதர்நிலம் போலவே, இப்புயல் கடந்து வாழ்ந்துவந்தனர். ஆயினும் அதன் சிறுசுவடு ஒன்று அவர்கள் வாழ்விலும் பதிந்தது. கிளிம் வாழ்வுப்புயல் அவன் மதிப்பை மெல்ல உயர்த்திற்று. அவன் ஆர்வத்துடன் நாடியபோது கிட்டாத ஆதரவு ஆர்வமிழந்த நிலையில் இன்று கிடைத்தது. வாழ்விழந்த அவனைப் புதர்நிலச் செல்வி ஆதரித்துப் புதுவாழ்வளித்தாள். வளர்ந்தும் பிள்ளை மனமுடைய அவனைச் சமூகம் பிள்ளையாக வளர்த்தது. புதர் நிலத்தின் ஒப்பற்ற மதலையாகிய அவனும் தன் வாழ்வுகடந்து புதர்நிலத்தின் வருங்கால வாழ்வென்னும் சிறுவீறு கட்டுவதில் முனைந்து பணியாற்றினான்.