உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

77

நாம் போட்டிருக்கும் திட்டத்தைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.”

இராமு: “ஏனில்லை? இவ்வளவு தொல்லை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் ஏதாவது ஒரு பிள்ளையை எடுத்து வளர்த்துக் கொள்ளலாம். நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அவ்வகையில் கிடைக்கும்.”

கங்கு: "ஆம், ஆனால் எந்தப்பிள்ளையையும் ஐந்து வயதாகுமுன் எடுத்து வளர்க்க முடியாது. அந்த வயதுக்குப் பின் அது உண்மையில் நம் குழந்தையாகப் போவதில்லை. இதையெல்லாம் எத்தனையோ தடவை பேசிப்பேசிப் பார்த்தாயிற்று. இந்தத் திட்டத்தில் என் பங்கு வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் பங்கு வேலையைச் செய்ய நீங்கள் பின்வாங்காதேயுங்கள்.”

இராமு: "நான் சொல்வதைக் கேள். ஏற்கெனவே கருப்ப மடைந்திருப்பதாகப் பாசாங்குசெய்து வயிற்றில் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு நீ படாதபாடுபட்டிருக்கிறாய். மலடி என்ற பெயரை மாற்றுவதற்காகப் பைத்தியக்காரி போல நடந்துவருகிறாய். பிள்ளை பிறந்து இறந்தது, வயிற்றில் இறந்தது, உனது நோயால் இறந்தது என்று நடித்து வருகிறாய். வ்வகையில் உன் மனத்துன்பம் எனக்குத் தெரியும். ஆயினும் -”

கங்கு: “ஆயினும் போயினும் ஒன்றும் இங்கே வேண்டாம். எனக்கு எப்படியும் இப்போது பிள்ளை கொண்டுவந்தாக வேண்டும்."

கங்கு உண்மையில் படபடப்பும் ஆத்திரமும் உடையவள். ஆனால் இப்போது அவள் யாரும் இரங்கத்தக்க நிலையில் கண் கலங்கி நின்று கணவனிடம் மன்றாடினாள்.

இராமு: "தாய்மை என்பது இன்னது என்பதை அறியும் நாம் ஒரு தாயிடமிருந்து அவள் குழந்தையைப் பிரிப்பது பழி யல்லவா?"

கங்கு: “இருக்கிற இரண்டு பிள்ளைகள் கஞ்சியில்லாமல் கதறுகிறபோது மூன்றாவது குழந்தையை எடுத்து வளர்ப்பது