உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் 26

காவிரித் தீரத்தில் வாழ்ந்ததாக டாலமி குறிக்கும் தோரிங்காய் அல்லது சோரெத்தாய் சோழியரே என்பதில் ஐயமில்லை. இப் பகுதியிலுள்ளனவாக அவரால் குறிக்கப்பட்ட பிற நகரங்களில் 'சோர நாகரின் மன்னுரிமைடயிமான ஓர்த்தோரா' என்பது உறையூர் அல்லது தமிழில் அதன் இலக்கிய வடிவமான உறந்தை என்பது உறுதி. கர்மாரா என்பது தற்காலத்துத் தஞ்சை மாவட்டத்தின் வட்டத்தலைநகரான சீர்காழியின் பழம்பெயரான கழுமலமாகவோ, தற்காலத் திருவாரூரின் பழம்பெயரான கமலையாகவோ இருக்கக்கூடும்.19

புனல் நாட்டுக்கு வடக்கிலுள்ள அருவா நாடு, அதற்கப் பாலிருந்தது அருவா வடதலை அல்லது வட அருவா ஆகம். அருவா, வடஅருவா என்ற இந்த இரண்டு மண்டலங்களும் சேர்ந்த பகுதி மாவிலங்கை அல்லது பெரிய இலங்கையென்று அழைக்கப் பட்டது. அதன் இயற்கை விளைவுகள் இலங்கை அல்லது ஈழ நாட்டின் விளைவுகளை ஒத்திருந்ததே இப்பெய ரிசைவின் காரணம் என்று தெரிகிறது.2 இம்மண்டலத்தின் தலைநகரம் கச்சி என்ற தற்காலக் காஞ்சிபுரம் ஆகும்.தமிழகத்தின் மற்ற எல்லா நகரங்களையும் போலவே அதுவும் கோட்டை கொத்தளங் களுடையதாயிருந்தது. அங்கே அண்மையிலேயே சோழனால் கட்டப்பட்டிருந்த புத்த பள்ளி இருந்தது!21 திருமால் கோயிலொன்றும் குறிப்பிடப்படுகிறது!22

இம்மண்டல முழுவதிலும் நாடோடிமக்களான அருவாளர் அல்லது குறும்பர் வாழ்ந்து வந்தனர். இந்த நாடோடி மக்களை முதன்முதல் குடிவாழ்வு வாழவைத்துச் சீரமைத்தவன் பெருமைமிக்க முதலாம் கரிகாலனேயாவன். இவ்வரசனைப் பற்றிப் பின்வரும் பகுதிகளில் விரிவாகக் கூற இருக்கிறோம். குடிவாழ்வு சீரமைத்தபின் அவன் இந் நாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்து அவற்றை வேளாண்குடி சார்ந்த குடும்பங்களுக்குப் பங்கீடுசெய்து கொடுத்தான்.

24 கோட்டங்களும் அவற்றின் உட்பிரிவுகளான 79 நாடுகளும் அடங்கிய பெயர்ப்பட்டி வருமாறு:-123