உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 26

எல்லையின் நிலை லை இது அல்ல. அது படகராவிலிருந்து காசர்க்கோட்டுக்கு 60 கல்வரை பின்னிடைந்து வந்துள்ளது.

புனல்நாட்டின் வடமேற்காகவும் அருவா நாட்டுக்கு மேற்காகவும் மலாடு அல்லது மலயமானாடு கிடந்தது. இதுவே மலையமான் அல்லது மலைக்கோமான் என்று வழங்கப்பட்ட ஒரு வேளிர்கோவின் நாடாய் இருந்தது. அவன் சோழ அரசரின் கீழுள்ள வேளிர்கோ. இம்மண்டலத்தின் தலைநகர் பெண்ணை யாற்றின் கரையிலுள்ள கோவல் என்பது!28 இந்நகர் இப்போது திருக்கோயிலூர் என்ற பெயருடன் தற்காலத் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்திலுள்ளது.

மலாட்டிலுள்ள இன்னொரு பெரிய நகர் முள்ளூர் அல்லது முட்களின் ஊர் என்பது.

மலாட்டுக்கு மேற்கேயுள்ளது சீதநாடு அல்லது குளிர் நாடு. இது பெரும்பாலும் தற்காலக் கோயமுத்தூர் மாவட்டத்தின் வடபாதியுடன் நீலகிரி மாவட்டத்தின் தென்பாதியையும் உள்ள டக்கியதாயிருந்தது. இங்கே தட்ப வெப்பநிலை தமிழகத்தின் ஏனைய பகுதிகளைவிட மிகவும் குளிர்ச்சிவாய்ந்தது.

சீதாநாட்டுக்கும் ஏற்கெனவே குறித்துரைக்கப்பட்டுள்ள குடநாட்டுக்கும் இடையேயுள்ள மேல்கரைப்பகுதி கற்கா நாடு அல்லது பாறை நிறைந்த நாடு என வழங்கிற்று. இப்பகுதி பாறைகள், குன்றுகள் நிறைந்தது. இதில் திருவாங்கூரின் வடமேற்குப் பகுதி உள்ளடங்கியிருந்தது. இன்றளவும் அது நாட்டக மக்களால் கக்கா நாடு என்றே வழங்கப்படுகிறது.

இப் பல்வேறு நாடுகளின் உட்பிரிவுகள் பற்றிய முழு விவரங்கள் எழுத்து மூலங்களில் கிட்டவில்லை. மேலே குறிப்பிட்ட படி மாவிலங்கையின் ஒரு பகுதிக்குரிய விவரங்களே கிடைத்துள்ளன. ஆயினும் சேர அரசின் குண்டூர்க் கூற்றம் பற்றியும் சோழ நாட்டின் மிழலைக் கூற்றம் பற்றியும் தமிழ்க் கவிஞர் குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து சேர, சோழ, பாண்டிய நாடுகள் முழுவதுமே கூற்றங்கள் அல்லது மாவட்டங்களாகப் பிரிவுற்றிருந்தன என்று அறிகிறோம்!29