உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

50.

51.

52.

53.

54.

55.

56.

57.

58.

59.

49

Mouth of the river Pseudostomos, Podoperoura, Semne, Koreoura, Bakrei, mouth of the river Baris.

Aioi country: இது ஆய் நாடு என்று கருதப்படுகிறது.

Melkynda, Elangkon (or Elangkor) a mart, Kottiara the Metropolis, Bammala, Komaria a cape & town.

மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம் 48 தொடர்ச்சி.

West of Pseudostomos; Naroulla, Kouba, Paloura.

Pasage, Mastanour, Kourellour, Pounnata where is beryl, Aloe, Karoura the royal seat of the Kerobothras.

Arembour Bideris, Pantipolis, Adarima Koreour, Inland town of the Aioi Morunda.

மக்கிரிண்டலின் டாலமி பக்கம் 180 தொடர்ச்சி.

மலபார்க் கையேடு (Malabar Manual)

போர்ச்சுகீசிய ஆசிரியர்களின் பந்தராணி (pandarani), திருமடத்துறவி ஓடோரிக்கின் (Friar Odoric) பிளாண்ட்ரினா (Flandrirna) ரோலன்ட்ஸனின் "தகஃவத் உல் முஜஹிதீன்" குறிக்கும் பண்ட்ரீயா (Fandreeah of Roulandson's Tahatat-ul myanidin) இபன் பதூதாவின் பண்டாரினா (Fandarina of Ibn Batuta) ஆகியவை இதுவே - மலபார்க் கையேடு ஏடு. 1 பக்.

72.

யூல் கூறுவதாவது: தனூரே துண்டிஸாய் இருந்திருக்கக் கூடும். அது ஒரு பழமைவாய்ந்த நகரம், ஒரு மண்டலத்தின் தலைநகரம், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கு வாணிகத் தொடர்புகளும் கப்பல் தொடர்புகளும் மிகுதியாய் இருந்தன. ஆயினும் ஒருவேளை இன்னும் சற்று வடக்கேயுள்ள கடலுண்டி அல்லது கடல்துண்டியும் இவ்வகையில் பொருத்தமுடையதாய் இருக்கக்கூடும். அது பெய்ப் பூருக்குத் தெற்கே மூன்று நான்கு கல் தொலைவிலுள்ள கடல் காவின் கரையில் கடலருகே உள்ள மேடான ஒருநிலமாகும். அது இப்போது ஒரு துறையல்ல. ஆனால் முன்காலங்களில் அது ஒரு துறையாய் இருந்திருக்க வேண்டுமென்றும், அச்சமயம் அது காயலுடன் தொடர்புடையதாயிருந்திருக்கக் கூடுமென்றும் அவ்விடத்துள்ள மக்கள்

கருதுகிறார்கள்.

டாக்டர் பர்னலால் இணைத்துதவப்பட்ட ஒரு குறிப்பில் அவர் பின்னும் கூறுவதாவது: கடல், துண்டி ஆகிய சொற்கள் இரண்டும் சேர்ந்து தமிழ் இலக்கண விதிகளின்படி சொல்லாக்க முறையில் 'கடலுண்டி என்றாகும். "மக்கிரிண்டிலின் டாலமி பக். 50'.

66

""

டாக்டர் பர்னலைப்போன்ற ஒரு பெரிய புலவருக்கு என் வணக்கம் எவ்வளவோ உரித்தாயினும், கடல், துண்டி இரண்டும் சேர்ந்து கடலுண்டியாவதற்குரிய எந்த