உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 26

ஆற்றங்கரைவரை கொண்டுசென்றன. படகுகள் இவ்விடத்தி லிருந்து சரக்குகளை அலெக்சாண்டிரியாவுக்கு இட்டுச்சென்றன.

'செங்கடலிலுள்ள மயாஸ் ஹெர்மாஸ்' துறைமுகத்தி லிருந்து கிட்டத்தட்ட120 கப்பல்கள் இந்தியாவுக்குச் செல்வதை நான் கண்டேன்' என்று கி.பி.19-ஆம் ஆண்டுக்குரிய தம் குறிப்பில் ஸ்டிராபோ? கூறுகின்றார்.

கிட்டத்தட்ட இக்காலத்திலே ஹிப்பலாஸ்' என்ற பெயருடைய ஒரு துணிகரக் கிரேக்கக் கடலோடி இருந்தான். அவன் அராபிய, இந்திய வணிகரிடம் பேசிப் பல செய்திகளைப் புரிந்துகொண்டிருந் தவனாகலாம். ஆகவே, அவன் அராபியா விலுள்ள ஃவர்தக்4 முனையிலிருந்து துணிச்சலுடன் இந்தியா நாடி விரிகடலில் கலஞ்செலுத்தினான். தென்மேற்குப் பருவக் காற்று அவனை நேரே தமிழகத்திலுள்ள மிளகு விளையும் நிலப் பகுதிக்குக்கொண்டுவந்துவிட்டது. இதுமுதல் தமிழகத்துடனுள்ள வாணிகத்தொடர்பு முன்னிலும் மிகுதியாகப் பெருகிற்று.

இச்சமயம் எகிப்தை வென்ற உரோமர்கள் பெருத்த ஆதாயந் தந்துகொண்டிருந்த வாணிகத்தைக் கைக்கொள்ளத் தயங்கவில்லை.

இந்த

'அணிமையிலே புதுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, மும்முரமாக நடந்துவருகிற பயணம்' என்று குறிப்பிட்டு,பிளிQ இந்தியக் கடல் வாணிகப் பயணம்பற்றிக் குறிப்பிடுகிறார். தம்காலப் பயண விவரம்பற்றி அவர் கூறுவதாவது:

“இதன்பின் அராபியாவிலுள்ள ஸியாக்ரஸ் முனைக்கூம்பி லிருந்து (ஃவர்தக் முனையிலிருந்து)” பாதலெ என்ற இடத்துக்கு மேல்காற்றோடு செல்வதே மிகப் பாதுகாப்பான பயணமாகக் கருதப்பட்டுவந்தது. இக் காற்றை மக்கள் இங்கே ஹிப்பலாஸ் என்று குறிக்கிறார்கள். இந்தப் பயணத்தின் மொத்தத்தொலை 1,435 கல் ஆகும். அடுத்த தலைமுறையில் மேற்கூறிய முனைக் கூம்பிலிருந்து இந்தியாவிலுள்ள ஸிகெரஸுக்கு நேரே செல்வதே இடையூறு குறைந்த தொலைக்குறைவான வழி என்று கருதப்பட்டது.

7

"இம்மாதிரி பயணம் கிலகாலமாகத் தொடர்ந்து நீடித்து நடந்துவந்தது. ஆனால் விரைவில் வணிகர் இன்னும் சுருக்கத்