உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 26

துறைமுகமும் உண்டு. சமயவாழ்வில் ஈடுபட்டவர்க்கும் துறவு வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கும் இது திருமுழுக்காட்டிட் மாதலால், அத்தகையவர் இங்கே பேரளவில் வந்து

குழுமுகின்றனர். இங்குள்ள நிறுவனத்தில் ஆடவரேபோலப் பெண்களும் நுழைவு பெறுகின்றனர். முன்காலங்களில் ஒரு பெண் தெய்வம் மாதந்தோறும் இதே இடத்தில் இம்மாதிரி திருமுழுக்காடிற்று என்று இவ்விடம்பற்றிய பழங்கதை கூறுகிறது.

"கொமாரிலிருந்து தொடங்கும் பகுதி கொல்கி (கொற்கை) வரை நீண்டு கிடக்கிறது. முத்துக்குளிக்குமிடம் இதுவே. அடிமை களும் தண்டனைபெற்ற குற்றவாளிகளும் இத்தொழிலைச் செய்கிறார்கள். இக்கண்டத்தின் தென்பகுதியாகிய இம்மாநிலம் முழுவதும் பாண்டியன் ஆட்சியில் ஒரு கூறு ஆகும்.

"கொல்கி தாண்டியபின் முதல் முதல் கடக்குமிடம் உள்நாட்டுப் பகுதியாகிய அர்கலஸ் அடுத்துக் கிடக்கும் அர்கலஸ் விரிகுடாவேயாகும். எபிடோரஸ் தீவில் முத்துத் தொழிலில் முத்துக்கள் கிடைக்கின்றன. இம்முத்துக்கள் துளையிடப்பட்டு வாணிகக்களத்துக்கு உரியதாக உருவாகக்கப் படும் இடம் உலகில் இது ஒன்றுதான். இதே தீவிலிருந்துதான் முத்துக்கள் கோத்த நேர்த்தியான மஸ்லின் ஆடைகள் உண்டுபண்ணப்படுகின்றன.

“அர்கலஸிலிருந்து மேற்செல்பவர்களுக்குக் கரையிலுள்ள துறைகள், வாணிகக்களங்கள் ஆகியவற்றில் முக்கியமானவை கமரா, பாதுகா, சோபட்மா ஆகியவை. லிமுரிகாவின் வணிகரும் மற்ற மண்டலங்களின் வணிகரும் இவற்றில் வந்து திரள்கின்றனர். தவிர வாணிகக் களங்களில் லிமுரிகெயின் கரையோரமாகச் சுற்றி வாணிகம் செய்யும் கப்பல்கள் இங்கே காணப்படுகின்றன. சங்கரா என்று அழைக்கப்படும் இக்கப்பல்களில் மிகப் பெரியவை மோணோக்ஸலா என்றும், மற்றவை கொலாண்டியோ பாண்டா என்றும் அழைக்கப்படுகின்றன. இவை மிகப்பாரியவை. கங்கைப் பகுதிக்கும் கொண்ணாட்டுக்கும் 29 செல்ல தகுதிவாய்ந்தவை.

66

வை

"லிமுரிகெ வாணிகக்களங்களுக்கென்று எகிப்தில் உண்டு பண்ணப்படும் பொருள்கள் யாவும் இந்த இடங்களுக்குக்