உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

71

கடற்கரையில் தற்கால இராமேச்சுரத்தின் அருகிலுள்ள கந்தமாதனம் என்ற ஒரு குன்றே என்று தோற்றுகிறது.

1800 ஆண்டுகளுக்குமுன் வரையப்பட்ட பண்டை அமராவதிச் சிற்பங்களிலும் அதுபோன்ற பிற இடங்களிலும் தலைக்குமேல் பின்புறமாக விரிந்த படங்களுடன் நாகங்கள் தீட்டப்பட்ட மனித உருவங்கள் உள்ளன. இவை நாகர் உருவங்களே4. அமராவதியின் அழிபாடுகளிலிருந்து அகற்றப் பட்டுள்ள சில துண்டங்கள் சென்னை அரசியல் கண்காட்சிச் சாலையில் காணப்படுகின்றன. இச்சிற்பங்களில் நாக அரசருக்குத் தனிச் சிறப்புச்சின்னமாகப் பின்புறம் ஐந்தலை அல்லது எழுதலை நாகம் உள்ளது. நாக இளவரசியருக்கு இதுபோல முத்தலை நாகங்களும் பொதுநிலை நாகர்களுக்கு ஒருதலை நாகங்களும் உள்ளன.

இச்சிற்பங்களை அரிது முயன்று செதுக்கிய செதுக்குக் கலைஞர் நாகர்கள் நாக இயல்புடையவர் என்றும், அவர்கள் உடல்பாதி மனித உருவாகவும், பாதி பாம்புருவாகவும் அமைந்தி ருந்தன என்றம் கருதியதாகத் தோற்றுகிறது. இந்நம்பிக்கையைப் பண்டைத் தமிழ்க்கவிஞர்கள் அரை குறையாகவே கொண்டிருந்த தாகத் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் தம்முடன் சமகாலத்த வரான நாகர்களை மனிதராகவே கருதிக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அதே சமயம் பண்டை நாகர்கள் பாதலத்தில் பாம்புகளாக வாழ்த்தாகக் குறிக்கின்றனர்.

சோழர் தலைநகராகிய ய காவிரிப்பட்டினத்தின் பழமையையும், செல்வவளத்தையும் குறிப்பிடும்போது, நாகர் தலைநகர் அதாவது நாகர் நாட்டின் தலைநகரைப்போலப் பழமையும், புகழும் உடைய தாயிருந்தது என்று கூறுகிறார்.5 இதிலிருந்து 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த தமிழ் மக்கள் நினைவெல்லைக் குள்ளாக, நாகர் அரசுகளைவிடப் பழமைவாய்ந்த அரசுகள் எதுவும் இருந்ததில்லை என்று தோற்றுகிறது. காவிரிப்பட்டினமே நாகர்களின் ஒரு பழைய வாழ்விடமாயிருந்ததென்று கூறப்படுகிறது.

இந்நாகர்கள் ‘வளைந்த செவ்விதழ்க'ளும் திட்பம் வாய்ந்த ஒள்ளிய பற்களும், இடி முழக்கம்போன்ற குரலும் உடையவர்கள்.