உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 26

வெண்பொன்மேனியராகிய ஆரியர்கள் காபூல் வழியாக பஞ்சாபில் வந்து குடியேறிய காலத்தில், ஆசிய நடு மேட்டு நிலங்களில் வாழ்ந்த மஞ்சள்நிறப் பசும்பொன் மேனியர் குழு ஒன்று திபெத்திலும் நேபாளத்திலுமுள்ள மிகப்

பல

கணவாய்களின் வழியாகத் தெற்கு நோக்கி வந்து கங்கைத் தாழ்நிலங்களில் குடியேறி யதாகத் தெரிகிறது. இந்த மஞ்சளினத்தவரை சமஸ்கிருத எழுத்தாளர் இயக்கர்கள்28 என்று குறித்தனர்.பாளிமொழியில் காலக் கணிப்புக்கள் இயற்றியவர்கள் அவர்களை யக்கோக்கள்29 என்றனர். சீன வரலாற்றாசிரியர் இவர்களை யூக்சி30 என்று அழைத்தனர்.31

இந்த மஞ்சளினத்தவர் நிலவுலகின் மேட்டு நிலங்களுக்குரிய வராயிருந்ததனால், தாழ்நிலங்களில் வாழ்ந்தவர்களைவிடத் தம்மை மேம்பட்டவர்களென்று கருதினர். ஆகவே 'தெய்வ புத்திரர்கள்' அல்லது வானவர் சேய்கள் என்ற பெயரை அவர்கள் புனைந்து கொண்டனர்.அறிவுப்பண்பிலும், ஒழுக்கப் பண்பிலும் மேம்பட்ட ஒரு இனத்தினராகவே அவர்கள் விளங்கினார்கள். நாளடைவில் அவர்கள் வங்காள முழுவதும் பரவி, அங்கிருந்து கடல்வழியாகத் தென்இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்திருக்க வேண்டும்.

இராமாயணம் இயற்றப்பட்ட காலத்தில் இயக்கர்கள் இந்தியாவின் தென்கோடிவரை பரவிவிட்டனர். அவ்விதி காசத்தில் அவர்கள் இலங்கைக்கெதிரேயிருந்த கடற்கரையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.32

"பின்னர்த் தண்புனற் காவிரியின் தடம்

மின்னும் வானவர் நங்கையர் ஆடிடத் தன்னின் ஈர்க்கும் தனிநலம் வாய்ந்திடு நன்னர் மாநிலம் நண்ணூதிர் ஆங்கணே!”

“ஆங்கு நின்றும் அகன்றதன் பின்னரே பாங்கிற் பாண்டியர் முத்துப்பொன் பாவிய ஓங்கு வாயில் கடத்திர்! பின் ஆர்கலி தீங்கில் நோக்கம் திறம்படச் சேறிரே!”