உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 28

கிண்ணிகள் இருக்கின்றன. இதனினும் பெரிய வெள்ளிக் கிண்ணிகளும் இருக்கின்றன. நான் இதை ஹாரிக்குப் பரிசாக கொடுக்கிறேன். உனக்கு இது விருப்பம் தானே, ஹாரி” என்று

கேட்டான்.

சிறுவன் விடை அவர்கள் யாரும் எதிர்பாராததாயிருந்தது. "உன் அன்பிற்கு மிகவும் நன்றி, டாமி; அம்மையார் அவர்கள் ஆதரவும் எனக்குப் பெருமை தருகிறது. இருவர் அன்புக்கும் நான் கடமைப்பட்டவன். ஆனால் இத்தகைய பொருள்கள் எதுவும் உண்மையில் எனக்குத் தேவையில்லை. என்னை இவ்வகையில் மன்னிக்கக்கோருகிறேன்” என்றான் அவன்.

திரு மெர்ட்டன் அவன் தோள்கள் மீது கையிட்டுக் கொண்டு “ஏன் தம்பி, அப்படி சொல்லுகிறாய்; இது நல்ல வள்ளிக் கிண்ணியாயிற்றே. இதை ஏன் வேண்டாம் என்கிறாய்?” என்று கேட்டார்.

“எனக்குத் தேவைப்படும் கலங்கள் யாவும் என் வீட்டி லிருக்கின்றன. அவை கூட என் தேவைக்கு மேற்பட்டவை. அவற்றுட் சிலவற்றை நான் என் அயல் வீட்டுத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். தேவைக்கு மேற்பட்ட பொருள்களைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாதென்பது என் கருத்து. மேலும் கலங்கள் வெள்ளியினால் செய்யப்படுவது நல்லது என்று எனக்குத் தோன்றவில்லை. சற்று முன் வெள்ளித் தட்டமொன்றை இங்குள்ள ஒரு ஆள் கீழே போட இருந்தபோது, அம்மா அவரைக் கடிந்து எச்சரிக்க நேர்ந்தது. வெள்ளிப் பொருள்களைக் கொண்டுபோகும் போதும் கொண்டுவரும் போதும் அவை வெள்ளியாயிருப்பதனாலேயே எப்போதும் எச்சரிக்கையும், கவலையும், கண்காணிப்பும் தேவைப்படுகின்றன. அவை அலம்புவதற்கும் எளிதல்ல, உறுதியுடையவையும் அல்ல. எங்கள் வீட்டுக் கலங்களோ எப்படிப் போட்டாலும் எங்கே வைத்தாலும் கவலையில்லை. உறுதியும் உடையவை” என்று அவன் விடை பகர்ந்தான்.

திருவாட்டி மெர்ட்டன் “சிறுவன் முழுக்க முழுக்கப் பட்டிக் காட்டானாகவே இருக்கிறான்,” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.ஆனால் திரு. மெர்ட்டனோ அவனை வியப்புடனும் பாராட்டுடனும் நோக்கி “தம்பி, நீ இச்சிற்றூருக்கும் இச் சிறு