உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதல்

4. உழைப்பார்வம்

நாளன்று காலை உணவு முடிந்ததும் திருபார்லோ சிறுவர் இருவரையும் தன் தோட்டத்துக்கு இட்டுச் சென்றார். அவரது முதற்பாடம் உழைப்பைப் பற்றியதாகவே இருந்தது.

"மனிதருள் உணவு உண்ணாதவர் இல்லை. விலங்கு களிடையேயும் அப்படியே. உயிரினங்களுள் உணவுண்ணா தவை எதுவும் கிடையாது.

பிற உயிரினங்கள் யாவும் தம் உணவைத் தாமே தேடிக் கொள்ளப் பழகியுள்ளன. ஆனால் மனிதரிடையே பலர் இப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். எனினும் மனிதரிடையேயும் உழைப்பவர் உழைப்பது எல்லாம் பெரிதும் உணவுக்காகவே என்பதை மறக்கக் கூடாது.'

""

பிற உயிரினங்களுக்கு உணவு ஒன்றே வாழ்க்கையின் பெருந்தேவை. மனிதனுக்கும் உணவே அடிப்படைத் தேவையாயிருக்கிறது. ஆனால் உணவல்லாத பல புதிய தேவைகள் மனிதனுக்கு உண்டு. உடை, உணவு சமைத்தல், வீடுகட்டல், அறிவு வளர்த்தல் முதலிய பலவும் இத்தகையவை. இத்தேவைகளுக்கும் அவன் உழைக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் மனிதரிடையே பலவகை உழைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வுழைப்புக்களை மனிதர் ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்வதால்தான் பலவகை உழைப்பாளிகள் ஏற்பட்டுள்ளனர். இருந்த போதிலும் மனிதன் அடிப்படைத் தேவையும் அடிப்படை உழைப்பும் இன்னும் உணவாகவும் உணவுக்கான உழைப்பாகிய உழவாகவுமே இயங்குகின்றது.

அடிப்படைத் தேவையாகிய உணவு ஒன்றுதான் யாவருக்கும் இன்றியமையாத பொதுத் தேவை. அது போல