உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(114) ||.

அப்பாத்துரையம் - 28

என்று கருதி அங்ஙனம் கூறிவிட்டேன். நான் செய்தது எவ்வளவு தவறு என்பதை இப்போது கண்டு கொண்டேன். உண்மையில் பல வகையிலும் ஆசிரியர் நன் மதிப்பையும் விருப்பத்தையும் பெற நான் தவறிவிட்டேன். இப்போது அவரிடம் எழுத்துக் கற்றுக் கொடுக்கும்படி கேட்க எனக்கு வெட்கமாயிருக்கிறது. அவர் என்மீது மதிப்புக்கொண்டு விருப்பம் காட்டும்படி ஏதாவது ஒரு செயல் செய்து அவரை மகிழ்விக்க எண்ணுகிறேன். நம் ஓய்வு நேரங்களில் நீ சிறிது கற்றுக் கொடுத்தால், நான் விரைவில் கற்றுக்கொள்வேன்.

நற்குணமுடைய ஹாரி இதற்கு முற்றிலும் இணங்கி னான். அவன் பொறுமையாகச் சிறுகச் சிறுகக் கற்றுக் கொடுத்தான். கற்றுக் கொடுப்பதிலும் ஹாரிக்கு இயற்கை யான ஆர்வம் இருந்தது. டாமியும் ஆவலுடன் கற்று விரைந்து முன்னேறினான். சில நாட்களுக்குள் அவன் தானாகவே ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தை வாசித்துப் பார்த்துக் கொண்டான். அதன் பின் முன் கூட்டி ஹாரியிடம் தான் அன்று வாசிக்க விரும்புவதாகக் கூறிவிட்டு, ஆசிரியர் ஹாரியை வாசிக்கச் சொல்லுமுன் அவரை வணங்கி “ஐயா, வாசிப்பில் வெறுப்புக் காட்டியதற்குச் சில நாளாக வருந்துகிறேன். அத்துடன் ஹாரியின் உதவியால் நானே வருந்திக் கற்று வாசிக்கப் பழகிக் கொண்டேன். ன்று நானே முயன்று கதை வாசிக்கலாமா?” என்று கேட்டான்.

ஆசிரியர் முக மலர்ச்சியுடன் “ஓ, வாசிக்கலாம்” என்றார்.

எடுத்த எடுப்பிலேயே டாமி தட்டுத் தடங்கலில்லாமல் வாசிப்பது கண்டு ஆசிரியரே வியப்படைந்தார். அவன் வாசித்த கதை ‘இரு நாய்களின் வரலாறு' என்பது.