உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல் ஹாரி

123

விலங்குகளை மனிதர் பயன்படுத்துவது கூட உண்மையில் நேர்மை என்று கூற முடியாது. ஆனால் விலங்குகளுக்கும் மனிதருக்கும் உள்ள வேற்றுமை அடிப்படை இயற்கையைச் சார்ந்தது. இரண்டு தரப்பும் இருவேறுபட்ட இனம்; பிறப்பிலேயே வேறுபட்டவை. கருப்பரும் வெள்ளையரும் அப்படியல்ல. இருவரும் மனிதர்களே. ன்றும் அவர்கள் நம்மைவிடப் பிற்பட்டவர்களல்ல. நம்மிடை தாழ்ந்த வகுப்பினர் என்பவர்கள் சில வாய்ப்புக்களில்லாமல் சீர்கெடுவது போலவே தான் அவர்கள் சீர்கெட்டுள்ளனர். ஆனால் நம்மிடையே தாழ்ந்தவர்கள் உழைப்பாலும் அறிஞர் அறிவாலுமே பணவசதி ஒன்றுமட்டுமுடைய உயர் வகுப்பினர் சோம்பேறி வாழ்க்கை வாழ்கிறோம். இது போலவே நம்மினத்தவரைவிடப் பலவகையில் மேம்பட்ட இவர்கள் சில நாகரிக வாய்ப்புக்கள் பெற முடியாதிருப்பதனாலேயே நமக்கு அடிமைப்படுகிறார்கள். நாகரிக மற்றவர்கள் என்று கூறப்படும் பல மக்களும் உண்மையில் தத்தம் சூழ்நிலைக்கேற்ற ஒவ்வொரு துறையில் வெள்ளை யரினும் திறமையுடையவர்களாயிருக்கிறார்கள்.

டாமி

சிறு வேறுபாடுகள், தனிச் சிறப்புகள் யாவருக்கும் இருந்தாலும் வெள்ளையரே எல்லாருக்கும் முந்தி நாகரிக மடைந்தனர் என்பது மறுக்கக்கூடாததன்றோ?

ஹாரி

ன்று முந்திக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். இது கூடச் சில வாய்ப்புக்களின் பயனாகவே. ஆனால் காலத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் வெள்ளையர் முந்திக்கொண்டார்கள் என்று கூறுவது முற்றும் பிசகு. ஏனெனில் வெள்ளையர் நாகரிகமடைந்ததெல்லாம் நேற்று முந்தாநேற்றுத் தான். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே இன்று நாம் கறுப்பர் என்று புறக்கணிக்கும் எகிப்தியர், பாபிலோனியர், இந்தியப்பழங்குடியினர் ஆகியவர்கள் உயர் நாகரிகமடைந்திருந்தனர். ஐரோப்பியர் இவர்களிடமிருந்தே நாகரிகத்தைக் கற்றுக் கொண்டனர் என்னலாம்.