உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

133

ஒன்றிரண்டு பேரை அடித்தேன். அவர்கள் அனைவரும் சேர்ந்து திருட்டுப் பயலே என்று வைது அடித்துத் துவைத்து விட்டனர். அதன்பின் தான் நான் ‘இவ்வாடையும் வேண்டாம், இத்தொல்லை களும் வேண்டாம்' என்று உன்னிடம் ஓடோடி வந்தேன், என்றான்.

>>

ஆசிரியர் இவற்றைக்கேட்டு டாமியை நோக்கி “உன் உதவியின் பொருத்தமற்ற தன்மை இப்போது விளங்கிற் றல்லவா?” என்றார். டாமி தலை கவிழ்த்துக் கொண்டான். பின் சிறுவனிடம் தான் நல்லெண்ணத்துடன் செய்தாலும் ஆராயாது செய்ததை மன்னிக்கும்படி கோரினான்.

திரு பார்லோ அதன்பின் ஹாரியையும் டாமியையும் ஏவிச் சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் ஒரு நாளைக்குப் போதிய உணவு வகைகளை அனுப்பி வைத்தார். சிறுவனும் டாமியிடம் எனக்கு நேர்ந்த தீமை என் நிலைமையினால், உன்னாலன்று. நீ வருத்தப் படவேண்டாம். நான் உன் நல்லெண்ணத்தை என்றும் மறவேன்' என்றான்.

டாமியும் இனி சிறுவன் குடிநிலைக்கேற்ற ஆடைகள் வாங்கி அவனுக்கும் அவன் உடன் பிறந்தார்களுக்கும் கொடுப்பதென்று மனத்தில் உறுதி செய்துகொண்டான்.