உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

ஹாரி

135

சில சமயங்களில் சில தீமைகள் நம்மால் விலக்க முடியாதவை ஆகின்றன. விலக்க முடிந்தால் நாம் விலக்கிக் கடமையாற்றுகிறோம். விலக்க முடியாவிட்டால் விலக்க முயலலாம். அதுவும் பயன் பெறாதவிடத்தில் விலக்கும் வாய்ப்புக்குக் காத்திருந்து அதனை மனவாக்குக் காயங் களால் எதிர்க்கும் முயற்சியில் முனையலாம். ஆனால் எச்சமயத்திலும் அதற்கு எவ்வகை ஆதரவும் கொடுக்கக் கூடாது. அதில் என்ன வந்தாலும் பட்டுக்கொள்வதே சிறந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே நாய்கள் அவர்கள் இருக்குமிடம் வந்துவிட்டன. ஆனால் எக்காரணத் தாலோ அவற்றின் மோப்பம் தடைபட்டுவிட்டது. அவற்றின் பின்னால் குதிரை மீது வந்த சேஸ் பெருமகனுக்கு நாய்களை எப்பக்கமாய்த் திருப்புவது என்று தெரியவில்லை. ஆகவே ஹாரியை நோக்கி “சிறுவனே, இப்போது ஓடி வந்த முயலை நீ பார்த்திருக்கலாமே! அது எப்பக்கம் போயிற்று தெரியுமா?" என்று கேட்டான்.

ஹாரி மறுமொழி கூறவில்லை. திரும்பவும் பெருமகன் கேட்க, ஹாரி ‘எனக்குத் தெரியாது, ஐயா' என்று கூறினான்.

சே. பெருமகன்

ஹாரி

நீ முயல் வந்ததையே காணவில்லையா?

வந்ததைக் கண்டேன். அது போனதைக் கவனிக்க

வில்லை.

சே.பெ

நீ பொய் சொல்லுகிறாய். அதை நீ ஏன் மறைக்க வேண்டும். நான் கேட்கிறேன். அது எங்கே போயிற்று என்று சொல். ஹாரி

நான் பொய் கூறவேண்டிய தேவையுமில்லை. மெய் கூற வேண்டிய தேவையுமில்லை. என்னால் ஒன்றும் கூறமுடியாது.