உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138 ஹாரி

அப்பாத்துரையம் - 28

ஆம். நானும் முன்னாலெல்லாம் அப்படி எண்ணிய துண்டு. அப்போதெல்லாம் ஏலமாட்டாத இடத்தில் பொறுமை என்ற முறையையே கொண்டிருந்தேன். இப் போதும் உண்மையில் ஏலமாட்டாத நிலையிலேயே பொறுத்துக் கொண்டிருந்தேனாயினும், அந்நிலையில் நான் பொய் கூறத் தயங்கியிருக்க மாட்டேன். முயல் போகாத வழியில் போனதாகக் கூறினால் தீமை செய்யாமலே தப்பிக் கொள்ளலாம். இப்போது நான் காட்டும் பொறுமை எதிர்ப்பின் நோக்கமே வேறு. உன்கையில் துப்பாக்கியும் ஆற்றலும் இருந்து நீ சுட்டுக் கொன்றிருந்தால், இந்தப் பெருமகன் கொடுமை மட்டும் தானே ஒழியும் - அதுவும் ஒரு உயிரை ஒழித்து! அதனால் கொடியார் கொடுமை முழுவதுமோ, பெருமக்கள் கொடுமை முழுவதுமோ ஒழியுமா? மேலும் இவன் கொலை இவனும் நாளடைவில் திருந்த வகையில்லாமல் செய்து விடுமல்லவா? ஆனால் என் எதிர்ப்புப் போன்ற எதிர்ப்பு ஏழைகளுக்கும் வழிகாட்டும். செல்வரையும் நாளடைவில் திருத்தும்.

ஹாரியிடமிருந்து டாமி பொறுமை எதிர்ப்பு என்ற புதியதோர் தத்துவத்தை உணர்ந்தான். அதன் வெற்றியையும் அவன் விரைவிலேயே காண முடிந்தது.

கடைக்குச் சென்று அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் ஊர் வெளியிடத்தில் ஒரு புறம் மக்கள் ஆரவாரம் கேட்டனர். அப்பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது ஒரு குதிரை தலைதெறிக்க ஓடுவதையும் அதன் சேணத்திற் சிக்கிய காலுடன் ஒரு மனிதன் பின்னால் இழுத்துச் செல்லப்படுவதையும் ம் கண்டனர். பலர் இக்காட்சியைக் கண்டு கலவரப்பட்டுக் கூவினாலும், எவரும் எதுவும் செய்யத் தெரியாமல் விழித்துக் கொண்டு நின்றனர்.

குதிரை செல்லும் வழி சற்று வளைவாயிருந்தது. சிறிது தொலைவில் குதிரை வேகத்தை இயற்கையாகத் தடுக்கக் கூடும் படிக்கட்டு ஒன்று இருந்தது. ஹாரி குறுக்காக ஓடிக் குதிரை அப்பக்கம் வருமுன் அதில் நின்று கொண்டான்.படிக்கட்டைக் கடப்பதற்கு அதனைக் குதிரை தாண்டியாக வேண்டும். வேகத்தைத் தடுத்து நின்று தாண்டத் தொடங்கு முன் ஹாரி