உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15. டாமியின் செயற் பண்பாடு

ஒரு நாள் காலையில் ஹாரியும் டாமியும் உலவச் சென்றவர்கள், வழக்க மீறி நெடுந்தொலை சென்று விட்டனர். ஆகவே, களைப்பார ஒரு மரத்தடியில் உட்கார்ந் திருந்தனர். திருந்திய நல்லாடை உடுத்த ஓர் ஏழைப் பெண்மணி அவர்களிருப்பதைக் கண்டு அவர்களை அணுகி, "குழந்தைகளே, உங்களைப் பார்த்தால் நடந்து வழிதவறி அலைந்தவர்கள்போல் இருக்கிறதே” என்றாள். ஹாரி “நாங்கள் வழி தவறவில்லை. சிறிது தொலைவு நடந்து விட்டதால் ஓய்வு கொள்ளவே உட்கார்ந்திருக்கிறோம்" என்றான். "சரி, அப்படியானால், என் வீட்டுவரை வந்து சிற்றுண்டியருந்திச் செல்லலாம் வாருங்கள்” என்று அவள் அழைத்தாள்.

டாமிக்குக் களைப்பு மட்டுமன்றிப் பசியும் மிகுதியாக இருந்தது. ஆகவே 'இவ்வம்மையாரின் அழைப்பை ஏற்றுப் போவோமே' என்று ஹாரியைக் கேட்டான். ஹாரி ஒத்துக் கொள்ளவே, இருவரும் அம்மாதின் வீட்டுக்குச் சென்றனர்.வீடும் சமையற்கட்டும் மாதின் ஆடையைப் போலவே திருத்தமும் தூய்மையும் உடையவாக இருந்தன. மாதின் இளஞ்சிறுமி அவர்கட்கு நறும்பாலும் அப்பத்துண்டுகளும் கொணர்ந்து கொடுத்தாள், இருவரும் அவற்றை உண்டு மகிழ்ந்து இன்னுரை யாடிக்கொண்டிருந்தனர். பிறகு அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு புறப்பட விரும்பினர்.

அச்சமயம் சுடு மூஞ்சியுடன் ஒருவன் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்து அம்மாதினிடம் “உங்கள் பெயர் தானா டாஸ்ஸெட்?” என்று கேட்டான். அம்மாது "ஆம். அதுவே எங்கள் குடிப்பெயர். நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாள்.

அவ்வயலான் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு தாளுறை எடுத்து, இது ஒரு மன்ற நடவடிக்கைப் பத்திரம். உங்கள் மீது