உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

||-

அப்பாத்துரையம் - 28

நான் அவனுக்குப் பிணையமாக இருந்து அவனைக் காத்தேன். அவனும் தடையின்றி மேல் புலம் சென்று தொழிலில் ஈடுபட முடிந்தது. அங்கே போன சில நாட்களில் பணம் அனுப்பி விடுவதாக அவன் வாக்களித்துத்தான் சென்றான். ஆயினும் சென்ற மூன்று ஆண்டுகளாக அவன் இருக்கும் திக்கோ அவனைப் பற்றிய விவரமோ தெரியவில்லை” என்றார்.

மாது இப்போது, முன்னிலும் பன்மடங்கு மனங்கலங்கி னாள். “ஐயோ, என் நன்றி கெட்ட அண்ணனாலும் என்னாலு மல்லவா கடனில்லாத நீங்களும் உங்கள் பிள்ளைகளு ம் இன்று திண்டாட வேண்டியிருக்கிறது. அதனாலல்லவா குடிப்பெருமையில் கருத்துடனிருந்த நம் வீட்டிலேயே இந்த ஏவலர் வந்து புக முடிந்தது" என அரற்றினாள்.

மனைவியின் துயர் கண்டபின் திருடாஸ்ஸெட்டுக்குத் தன் இல்லத்தில் துணிந்தேறிய ஏவலராகிய அயலவர்மீது சினம் பொங்கிற்று. “நம் பெருமை கெடுமுன் நான் உயிர் கொடுத்துக் காக்கிறேன்' என்று அவன் வாளை உருவிக் கொண்டெழுந் தான். மனைவி உடனே அழுகுரலுடன் சென்று அவனைத் தடுத்து “என்ன செய்கிறீர்களென்று எதையும் ஆய்ந்தோயாது செய்துவிடாதீர்கள். உள்ள பெருமையாவது இருக்கட்டும். நீங்கள் செய்ய விரையும் செயல் என்னையும் குழந்தைகளையும் என்றென்றைக்கும் மீளாத்துயரில் ஆழ்த்தும்” என்றாள். திரு டாஸ்ஸெட்டும் அவள் கூற்றின் உண்மையறிந்து அமைந்தான். இதற்குள் தாய் தந்தையர் துயரை உணர்ந்து பிள்ளைகள் கண்கலங்கி அழத் தொடங்கினர். தந்தை, இனித் தெய்வமே கதி எனத் தலையிறங்கிச் சாய்ந்தான்.

டாமி, இக்குடும்பக் கலக்கம் முற்றும் நாடகக் காட்சி பார்ப்பதுபோல் பார்த்திருந்தான். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை. அவன் சிறுமியிடம் “அம்மாவிடம் வேறு சமயம் வருகிறேன் என்று சொல்லு. நாங்கள் போய் வரு கிறோம்” என்று கூறிவிட்டு ஹாரியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். திரு பார்லோவின் இல்லம் வந்ததும் அவன் பார்லோவிடம் சென்று, தனக்குத் தன் வீடு செல்லச் சிறிது ஓய்வு தரவேண்டினான். அவன் ஏதோ குறிப்புடன் கோரிக்கை செய்வதை உய்த்துணர்ந்த ஆசிரியர், அதற்கு இணங்கினார். அவர் தம்