உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் - 29

இத்தகையவர் வாழ்க்கையிலே நாம் பலபடியான தியாகங் களைக் காண்கிறோம், வியப்பூட்டத்தக்க தன் மறுப்பை காண் கிறோம் என்பது உண்மையே. ஆனால் இத்தியாகம், தன் மறுப்பு, தன்னை, தன்னலத்தைத் துறந்ததுமட்டுமே. குறுகிய தன்னலத் தின் எல்லை விரிவாகிய பொதுநலமன்று, அன்பன்று; அருளன்று, கடவுட் பண்பன்று. இந்நிலையில் நாம் அதை உண்மையான தியாகமென்றோ, தன்மறுப்பென்றோ கூற முடியாது - தற்கொலை என்றுதான் கூற வேண்டும். அறிவின் தடமகன்ற வீரத் தற்கொலை என்றுகூட அதைக் கூறலாம். அருளாளர் குறிக்கொண்ட தன்மறுப்போ, தியாகமோ; துறவோ சான்றாண்மையோ; மெய்ம்மைச் சமயமோ கடவுட் பண்போ இதுவன்று.

அரங்கிலாடியன்றி அம்பலத்திலாட முடியாது

பெருஞ் செயல்களைப் பெரியார் மட்டுமே ஆற்ற முடியும். ஆனால் பெரியாருக்கும் பெருஞ் செயலுக்கும் உரிய பெருமைப் பண்பு சூழலிலுமில்லை; செயலிலும், செயலின் தன்மையிலும் இல்லை. அது செய்பவர் அகப் பண்பையும் அதன் பயனான செயல்வகைப் பண்பையுமே பொறுத்தது. பெரியார் எங் கிருந்தாலும் பெரியவரே; வாழ்வின் எந்தப் படியிலிருந்தாலும் பெரியவரே. அவர் எந்த நாட்டினர், இனத்தினர், சமயத்தவர், மொழியினர், எந்தக் கொள்கையினராயிருந்தாலும் பெரியவரே யாவர். அதுபோல அவர் செயலின் சூழலோ, புகழோ, இகழோ, வெற்றியோ தோல்வியோ அவர் பெருமைப் பண்பை அல்லது அவர் செயலின் பெருமைப் பண்பை ஒரு சிறிதும் பாதிக்காது. அவர் செயல் தொடங்கும் சமயம், சூழல் எதுவாயினும் அவர் அகப்பண்பும் சொற்பண்புமே சூழலைத் தமக்கிசைவாக மாற்றி யமைத்துக்கொள்ளும். பெரியாரின் பண்பு சூழற் பண்பாக மாறி, செயலையும், பெருஞ் செயலாக்கிவிடும்.

பெருமை நாடுபவன், புகழ் நாடுபவன் உலகத்துக்கு, மனித இனத்துக்குரிய பெருஞ் செயல்கள் செய்ய விரும்புபவனாக நீ அமைந்தால், அதற்குரிய பண்புகளை முதலில் உன் அகத்தில், பின் உன் வாழ்வின் அகமாகிய குடும்பத்தில் காட்டு. தனக்குத் தானே உதவி என்ற நிலையை, பிற சார்பற்ற தற்சார்பு நிலையை முதலில் அடைந்து, பின் உன் மனைவி, உன் பிள்ளை, உன்