94
அப்பாத்துரையம் - 29
திருத்த முனையாமல், தம்மைக் குற்றத்துக்கு ஆளானவர்கள் என்று கருதிப் பிறரை அல்லது சூழலை அல்லது ஊழைக் குறை கூறுகின்றனர்.
தம் குற்றத்தை மறைக்கும் இவ்விரண்டு நிலைகளுமே குற்றத்தை வளர்க்கும் செயல்கள் என்று கூறத் தேவையில்லை.
தன் வாழ்க்கைக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலும், ஒவ்வொரு கூறும் - தன் வலுவும் தளர்வும் இரண்டுமே தானே இயற்றியவை என்று மனிதன் கொள்ளும்வரை, அவ்வாழ்க்கைக் கட்டடம் அவனுக்குரியதாக அமைவதும் அரிது. அது ஆக்கம் பெறுவதும் அரிது. தற்செருக்கும் தன்னைத்தானே அநீதிக்கு ஆட்பட்டவனாகக் கருதி இரங்கும் தனிரக்கமும் இந்த நேர்மை யான வாழ்க்கை நோக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடும். வாழ்க்கையின் பிழையறிந்து அதைத் திருத்திப் புதிதாக, புது வலிமையுடன் ஆக்கும் வாய்ப்பும் அவனுக்கு இல்லாது போய் விடும்.
க
சில சுமைகள், கடமைகள் கட்டாயமானவையாக மட்டு மல்ல, கடுமையானவையாகக்கூட அமையலாம். ஆனால் அவற்றின் கடுமை அன்பும் மெய்யுணர்வும் உள்ளத்தில் இடம் பெறும் வரையிலும்தான் கடுமையாய் அமையும். அன்பொளி யும் மெய்யுணர்வொளியும் அவற்றை எளியனவாகவும் இன்பகரமானவையாகவும் மாற்றவல்லவை.
புறவாரப் புயல்கடந்த அகவார அமைதி
துன்பமும் தன்னுளைவும் பேரின்பக் கோயில்களின் புறவாரங்களில் மட்டுமே உலவுபவை. கோயிலின் அகவாரம் அவை கடந்தே உள்ளது. ஆகவே ஓரளவு தொடக்கத்தில் துன்பமும் உளைச்சலும் ல்லாமல் ஒருவன் பேரின்பக் கோயிலை அணுக மாட்டான். ஆனால் இத்துன்பமும் உளைச்சலும் புறவாரத்தை அவன் அகவாரம் என்று நினைக்கும் வரைதான் இருக்கும். இதுவே புறவாரத்துக்குரிய பொல்லா மயக்கம். இம்மயக்கத்தின் பயனாகவே அவன் துன்பக் காரணத்தைப் புறத்தே நோக்குகிறான். தன் பிழையைப் புறப்பிழையாகக் கருதுகிறான். இந்தப் படி கடிந்து அக நோக்குடன் பிழைகளை அகநிலைக் குறைபாடு களாகக்