உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 29

சிந்தனையற்ற குருட்டுணர்ச்சி துன்பத்தின்மேல் துன்பம் சுமத்தும். அது மட்டுமன்று. குருட்டுணர்ச்சி மட்டுமீறி வளர்ந்துவிட்டால், சிந்தனை ஏற்பட்டாலும் அதை அவ் வுணர்ச்சியே இயக்கத் தொடங்கிவிடுகிறது. அத்தகு சிந்தனை குருட்டு உணர்ச்சிகள், கீழ்த்தர அவாக்களையே வளர்த்துச் சுமை பெருக்குகின்றன. வாழ்க்கை அச்சுமைகளின் கீழே தற்செயலற்ற தாக, இன்பமற்றதாக, அமைதியும் ஓய்வும் அற்றதாக உழல் கின்றது.

இன்ப வழி என்பது பெரிதும் சுமை வீழ்ச்சிக்குரிய வழியே. அது தன்னலமகற்றித் தூய உயர்வெளியில் மனிதனை உலவ வைக்கிறது. வாழ்வின் உயர்தளங்களில், இனவானில், இன்ப ஒளிக் கோளங்களிடையே இன்ப ஒளிக்கோளமாக அவனைச் சுழல வைக்கிறது. தன் ஒளியால் சூழ் ஒளிகளையும் உயர்தளப் பேரின்ப ஒளியையும் தன்னூடாக உலகில் ஒளிவிட வைக்கிறது. சுமைகள் தன் ஒளி கெடுத்து, சூழொளிகளையும் உயர்தளப் பேரின்ப ஒளியையும் மறைக்க மட்டுமே உதவக் கூடும்.

5‘பசிய புல்வெளி அழகிது, தண்மை அளிப்பதே எனினும் அதில் படர்ந்து நசிதல் புல்லிது; சேறொடு மாசு செறியும் அத்தளம் விடுத்தே

ஒசிந்த பூங்கொடி மணங்கமழ் மலரும் ஓங்கு பொன்கிளைத் தூங்குறு கனியும் பசிக் கயின்றுபின் பனிவெளிப் பறந்து பாலொளிக் கதிர் பயின்றிடு வாயே!

அடிக்குறிப்புகள்

1.

“This to me is life:

That if life be a burden. I will Join

2.

99

To make it but the burden of a song.' - Bailey

"Have you heard that it was good to gain the day? I also say it is good to fall, battles are lost in the same spirit in which they are won."

- Walt Whitman

3.

"Wake thou. O self, to better things,

To yonder heights uplift thy wings,

Take up the psalm of life new!