உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

5. புறந்தெரியாச் சிறு தியாகங்கள்

துறக்க நீக்கமும் தொடரும்பொன் னுலகதன்வரவும் குறித்து நெஞ்சம் குமுறுவ தென்உனைச் சூழ இறப்பி லாப்புகழ் இன்பொளி இலங்குதல் காண்நீ!

நல முலாவுநற் பண்புகள் எவை எவை அவையே நில வுலாவிய நீள்கவி னார்ந்திடும் இன்பம் நில மளாவுற அகழ்ந்துகட் டடமெழுப் பிடுவோர் நில வுலாவுநீள் மாடத்தில் உலவிடு வாரே!"

2வாய்மை உன் அகத்துலவுது; அதனை நீ புறத்தே சேய்மை யாகக் கொண்டு ஐயமுற்று அயர்த்திடல் வேண்டா

பெய்லி

- பிரௌனிங்

வேண்டுவார் வேண்டும் செல்வம் வேண்டாமையால் வரும் செல்வமேயாகும். வாய்மைபற்றிய முரண்பாடான வாய்மை இது.

வாய்மையை,

இன்பத்தை அடங்கா ஆர்வத்துடன், ஆத்திரத்துடன் எட்டிப்பிடிக்க விரும்புபவர் அதனைக் கைநழுவ விட்டு ஏமாறுவர். அமைதியுடனிருந்து அதைத் துறக்கும் உர முடையாரையோ, அது சுற்றி உலவும்! தன்னலத்துடன் தனக்கெனப் பின்பற்றும் போது அது அப்பால் சென்று சென்று எட்டாத தொலைக்கு ஏய்த்துச் செல்லும். பொதுநல அவாவுடன் பொறுமையாகக் காத்திருப்பவர் கையில் அது தானாக வந்து அமரும்.

ன்

ஒவ்வொரு நற்பண்பின் பேறும் அதற்குரிய, அதற்கு மாறான ஓர் அல்பண்பின் களைவைத் தொடர்ந்து வரும் பண்பு. ஒவ் வொரு தூய இன்பமும் அதற்குரிய ஒரு தன்னல அவாவின்