உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

145

கெல்லாம் தலையூற்றான பழி என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். ஒரு பழிகாரனை ஒதுக்குவதன் மூலமே தாங்கள் பழிகாரர் என்பதை வலியுறுத்திக்கொள்வதையும் அவர்கள் கவனிப்பதில்லை ஏனெனில் உண்மையில் மற்றவர்களைக் கண்டிக்கும் அளவிலேயே ஒருவன் பழி பழிகேடு ஆகிறது.

கண்டிப்பின் கடுமையே பழியின் கடுமை ஆகும். மற் றொருவன் பழிக்கு வருந்தத் தொடங்கிவிட்டால், பழிகாரன்கூட ஒத்துணர்வின் முதல் படியில், புறப்படியிலேனும் காலடி எடுத்து வைத்துவிட்டவன் ஆகிறான். அவன் பழிகள் அதன்பின் அவனைவிட்டு மெல்ல மெல்ல அகல்வது உறுதி. அதே சமயம் பிறர் கண்டிப்புக்கும் பழிப்புக்கும் ஆளாகும் ஒருவன் பழி காரனானாலும், பழிப்பையும் கண்டிப்புக்களையும் பொறுமை யுடன் ஏற்றமைவானானால், அவன் பழிப்பவர்களை விட, கண்டிப்பவர்களைவிட, அகவாழ்வின்பத்துக்கு அருகாமை யுடையவனாய் விடுவான்.

ஞானியின் ஒத்துணர்வின் இயல்பு

நல்லவர்கள், மெய்யறிவுடையவர்கள் எவரையும் கண்டிப்ப தில்லை. குருட்டு உணர்ச்சி வெறிகளையும் தன்நலங்களையும் துறந்த காரணத்தால் அவர்கள் அன்பும் அமைதியும் உலவும் இன்பவெளியில் குளித்தெழுகின்றனர். எனவே அவர்கள் பழிகாரர் பழிகண்டு அஞ்சுவதில்லை. அதன் இயல்பறிந்து, அதனால் அவர்களுக்குத் தீமை வருவதை முன்னரே அறிந்து எச்சரிக்கவே விரும்புகின்றனர். மடமைத் துயிலொழித்து அறிவொளி கண்ட அவர்கள் தன்னல ஒருச்சார்பு நிலைகளி னின்றும் நீங்கியதனால் பழிகாரனுடன் ஒத்துணர்கின்றனர். அவனை யார் பழித்தாலும் தூற்றினாலும் அவர்கள் பழிப்பவர் பக்கமோ, தூற்றுபவர் பக்கமோ சாராமல் அவனருகே சென்று அவனுக்குப் பாதுகாப்பு அளிக்க விரைகின்றனர்.

அவர்கள் பழிகாரனை அணைப்பர், ஆனால் அதே சமயம் அவர்கள் பழிகாரனைப் பழிப்பவரையும் எதிர்ப்பதில்லை. அவர்களையும் அணைக்கவே முயல்கின்றனர். பழிப்பை அவர்களால் விலக்க முடியாவிட்டால் அப்பழிப்பைத் தாம் ஏற்றுப் பழிப்பவர், பழிப்புக்களானவர் ஆகிய இருவர் உள்ளங்