உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(148) ||.

ஒத்துணர்வின் படிகள்: இரக்கம்

அப்பாத்துரையம் - 29

ஒத்துணர்வின் வகைகள், படிகள் பல. அவற்றுள் முதல் வகை, முதற்படியே இரக்கம் என்பது. அறியாமையை, துன்பத்தை, ஏலாமையைக் கண்டவுடன் பெரும்பாலாக எல்லா நாகரிக மக்களுக்கும் ஏற்படும் உணர்ச்சியே இது. ஆயினும் இதுவே நாகரிகத்தின், பண்பாட்டின் தெய்வீகக் கூறு. இஃது உலகில் எவ்வளவு இருந்தாலும் கேடில்லை, அஃது எவ்வளவு மிகுதியோ அவ்வளவு நலம்; அவ்வளவும் இனம் வளர்ச்சியுறும். உலகில் இஃது இன்னும் பேரளவில் வளரவேண்டிய ஒரு பண்பு என்பதில் ஐயமில்லை.

56

"ஏலாதவர்க்கு வலிமை அளிப்பது,இவ் வையகத்தே

மேலாம் உரம் உடையார்க்கு மெலிவின் நெகிழ்வளித்து

மாலாகிய மேடுபள்ளம் தவிர்ப்ப திரக்கமதே!'

ஆனால் கண்டிப்பும் சீற்றமும் அற்ற, கடுமையும் வெறுப்பும் அகன்ற இடத்திலேயே இரக்கம் பண்பட்ட குணமாக முடியும். தன் பழிகள் காரணமாகத் துன்பப்படும் ஒருவனைக் கண்டு, 'இஃது இவனுக்குச் சரி, இவன் குற்றத்துக்கேற்ற தண்டனை’ என்று கூறுகிறவர் அல்லது கருதுகிறவர் உண்டு. இத்தகைய வர்கள் இரக்கமுடையவர்களல்லர், அவர்கள் செயலில் இரக்கம் காட்டினாலும் அது இரக்கப் பண்பன்று, பண்பட்ட இரக்க மன்று. அது கடுப்பான உள்ளத்தின் அறிகுறி. துன்பத்தைக் காண விரும்பாமல் விலகுவது, கண்டும் காணாததுபோல் செல்வது, கண்டு இரக்க உணர்வு பெறினும் அதன் வயப்பட்டுச் செயலில் முனையாது வாளா வருத்தத்துடன் செல்வது ஆகியவை யாவும் இத்தகைய கடுப்பான உள்ளப்பண்பினை பலபடிகளே.

இத்தகையவர் ஆன்மிக நிலையில் மனித இனத்தில் தம்மைத்தாமே பண்பிற் பிற்பட்டவர், பண்புக்குள்ளர் ஆக்கிக் கொள்கின்றனர். அவர்கள் இரக்கமின்மையே அல்லது இரக்கப் பண்பின்மையே அவர்கள் பழியாகிறது. அவர்கள் இன்பத்தில் பங்கு பெறாமல் தம்மை இன்பநெறியிலிருந்து விலக்கிக் கொள்கின்றனர். தம்மை அறிந்தோ, அறியாமலோ துன்பப் பயிருக்கு வித்திட்டு விடுகின்றனர்.