150 ||
அப்பாத்துரையம் - 29
வனுக்கு எதிரான பகைமை உணர்ச்சி மட்டுமன்று, அது சமுதாய அழிவுதேடும் சமுதாயப் பகைமை உணர்ச்சி ஆகும்.
மற்றப் பண்புக்கேடுகள் இன வளர்ச்சியை மட்டுமே தடுக்கும். இதுவோ வளர்ந்துவிட்ட சமுதாயங்களை, இனங் களையே கெடுக்க, அழிக்கவல்லது. இப்பழியின் இத்தனை கேடுகளும் கூடப் பெரிதல்ல. இவற்றினும் பெரிய அகப்பண்புக் கேடொன்றை அது வளர்க்கிறது. பொறாமையுடையவன் மட்டுமன்று, பொறாமையுடையவன் தோற்றிய சமுதாயமே இன்பத்தைப் பற்றி, செல்வம், ஆற்றல், அறிவு ஆகியவற்றைப் பற்றித் தவறான ஒரு கருத்தைக் கொண்டு வாழ்கின்றது - பொறாமைப் பண்பு அந்தச் சமுதாய அகநோயின் புறச்சின்னம் மட்டுமே.
ஆற்றல் ஆற்றலுடையவன் நலத்துக்கும் பிறர் அழிவுக்கும் உரியது என்று கீழ்த்தரச் சமுதாயம் எண்ணுகிறது. அஃது ஆற்றலற்றவர் பாதுகாப்புக்குரியது என்று அச்சமுதாயத்தினர் எண்ணுவதில்லை. அறிவு, செல்வம் ஆகியவற்றையும் அவர்கள் இவ்வாறே சமுதாயப் பகைப் பண்புகளாகக் கொண்டு போற்று கின்றனர். இன்பத்தையும் அவர்கள் வாணிகமுறையிலே ஒருவர் இன்பம் மற்றவர் துன்பம் எனக் கருதுகின்றனர்.
-
வாழ்க்கை ஒரு கூட்டுழைப்பு என்று கருதாமல் பல கீழ்த்தர மனிதர் - பல கீழ்த்தரச் சமுதாயத்தினர் - பல கீழ்த்தர இனத்த வர்கள் அதை ஒரு பகைமைப் போராட்டக்களம், ஒரு வாணிகப் போட்டிக்களம் என்று நினைக்கின்றனர்.
நம் தற்கால மனித நாகரிக சமுதாயத்தின் அடிப்படை கூட்டுழைப்புப் பண்பு சார்ந்ததேயானாலும், போராட்டப்பண்பு, வாணிகப் பண்பு ஆகிய இரு திசைகளிலுமே அது சென்று கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. தற்கால உலகின் ஆட்சியாளர் மட்டுமன்றி, அதன் அறிஞர், கலைஞர் ர் தலைவர்கள் பலர் கூட இந்நச்சுப் போக்குக்கு இரையாகியே யுள்ளனர் - தெரிந்தோ தெரியாமலோ, இதை வளர்க்கவே செய்கின்றனர்.
இந்நிலை ஏற்படாத சமுதாயத்தில், இனத்தில், 'பொறாமை' என்ற ஒரு பண்புக்கேடு தோற்றவே இடமிராது. அத்தகைய