உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

அப்பாத்துரையம் - 29

ஊழ் - இனமளாவிய தெய்விகப் பெருங்கோவை

-

மனித வாழ்வு மட்டுமன்று, உயிர்வாழ்வும் உயிர் வாழ்வு மட்டுமன்று, இயற்கையும் மூன்றும் ஒரே மாபேரினக்

-

கோவையுள், கடவுட் கோவையுட்பட்டவை. தொடக்கப் பள்ளி, இடைத்தரப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக நிலையங்கள் என்பதுபோல, இயற்கை, உயிர், மனித இனம் என்பன அம்மாபேரினத்தின் தெய்விகப் பெருங் கோவையின் முப் பெரும் படிகள், அவ்வளவே; மூன்றையும் ஒரே அடிப்படை அமைதி - ஊழ் - இயக்குகிறது. ஆனால் அவை ஒன்றிலிருந்து ஒன்று, புறமிருந்து தொடங்கிப் படிப்படியாக அகநோக்கிச் செல்கின்றன. இதுவே அவற்றின் வேறுபாடு. அவற்றின் ஒவ்வொரு படியிலும் அன்பும் அறிவும் பெருகி, தன்னலங் கடந்த பொது நலமும் மெய்யுணர்வும் வளர்கின்றன. உள்ளம் விரிவுற்று மலர்ச்சியடைந்து, இன உள்ளமாக, தெய்விகப் பேரின்ப வெளியில் உலவும் ஆற்றலுடையதாகிறது.

முன்கருதலில்லாமலும் ஒத்துணர்வில்லாமலும் பிற உயிர் களுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ ஊறுவிளைக்கும் போது அல்லது உயிர்க்கொலை நிகழ்த்தும்போது பேரின்ப ஒளி நம் அகக் கண்களிலிருந்து மறைக்கப்படுகிறது. வாழ்வில் இன்பங்கள் நலிந்து கெடுகின்றன. துன்பங்கள் மலிகின்றன. இந்நிலையிலேயே உடல் உடலை மாய்க்கின்றது. உயிர் மீது திண்ணிய அறியாமைத் திரையிடுகிறது. உணர்ச்சி வெறிகள் உணர்ச்சி வெறிகளுக்கு

ரையாகின்றன. அறிவு மழுங்குகிறது. தன்னலம் தன்னலத்தை விழுங்குகிறது. அன்பு கனிய முடியாமல் உணர்வு மறுகுகிறது. மனிதனின் உள்ளார்ந்த தெய்வீக இயல்பை அழிப்பவை இவையே. அவ்வியல்பை ஊட்டி வளர்ப்பவை, ஊக்கி ஆக்கு பவை அன்பு, நேசம், ஒத்துணர்வு ஆகியவைகளே - தூய தன்னலந் துறந்த கருத்துக்கள், சொற்கள், செயல்களே!

மனித இனம் கடந்த பேசாமொழி -அன்பு

மற்றவரை நாம் ஒத்துணருந்தோறும், நம்மீதும் பிறர் ஒத்துணர்வு பெருகுகிறது. எனவே ஒத்துணர்வு என்றும் வீண் போவதில்லை, நேர்மாறாக, கணந்தோறும் ஒன்று பத்து, பத்து நூறாகப் பெருகிக்கொண்டே செல்கிறது. அத் தெய்வீகத்