பேரின்பச் சோலை
அநீதிக்குப் பதில் அநீதி என்பது நீதியன்று
161
அநீதிக்குப் பதில் அநீதி செய்வதே நீதி என்பது உண்மையானால், கொலைக்குப் பதில் கொலை செய்வது உயிராக்கம் என்பதுவும் உண்மை என்று கூற வேண்டும். ஆனால் கொலைக்குப் பதில் கொலை இரு கொலை ஆகுமேயன்றி உயிராக்கம் ஆகாது. இரண்டாவது இறந்த உயிரால் முதலில் இறந்த உயிர் திரும்ப வரப்போவதில்லை. அதுபோலவே இரண்டாவது அநீதியால் முதல் அநீதி நீதியாய் விடப் போவதில்லை. அநீதி இரட்டிப்பாயிற்று என்று மட்டுமே கூறலாம்.
இதுமட்டுமன்று. தொடங்கிவிட்ட அநீதிச் சங்கிலி இத்துடன் முடிந்து விடுவதில்லை. இரண்டாவது அநீதியை மாற்ற மூன்றாவது, மூன்றாவதை மாற்ற நான்காவது என்று இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். தொடக்க அநீதி மறக்கப்பட்டே போகும். ஆனால் அநீதிக் கோவை மட்டும் மரபறாது நீண்டு கொண்டே, வளர்ந்துகொண்டே செல்லும்.
உலகில் பல இனமாற்சரியங்கள், பழமை வாய்ந்த இனப் பகைமைகள், அரசியல் குளறுபடிகள் இவ்வாறு சிறு அநீதி களிலிருந்து தொடங்கிச் செயலெதிர் செயலாய்ப் பெருகி, முதல் நிகழ்ச்சியின் நினைவு கடந்து நிலையாக வளர்பவையே.
மன்னிக்கும் பண்பு இல்லாதவன் உள்ளம் ஓயாது பகைமை யிலும் வெறுப்பிலும் கிடந்து உழலும். இத்தகைய உள்ளத்தில் அமைதியோ ன்பமோ எப்படித் தலைகாட்ட முடியும்? புகைந்தெரியும் மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகள் பெறும் அவதி எத்தகையதோ, அத்தகையதே அவர்கள் அவதியும்! பகைமை அவ்வப்போது சீற்றமாகக் கிளர்ந்தெழும். பகைமை புகைந்தெரியும் மரத்துக்கு ஒப்பானால், சீற்றம் கொழுந்துவிட்டு ங்கி எரியும் மரத்துக்கு ஒப்பாகும். இன்பமட்டுமன்றி, இன்பத்துக்குக் காரணமான அறிவும், அதற்குரிய முன்னீடான அமைதியும் இப் பண்புகள் நிலவும் உள்ளத்தை அணுக முடியாது.
ஓ
மன்னிப்புப் பண்பின் அமைந்த இன்பமறியாத உள்ளங்கள் தான் பழிக்குப் பழி என்ற மின்னல் புயலின்பத்துக்கு இரையாக