உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

அப்பாத்துரையம் - 29

வளமடையும். அதுபோலவே கடுமை, கொடுமை, தன் முனைப்பு ஆகிய தீப்பண்புகளும் தம்மைச் சுற்றியுள்ள அதே வகைப் பண்புகளைத் தம்மை நோக்கி ஈர்த்து, அப்பண்புகளைத் திரட்டித் தாமும் வலிமையுறும். இம்முறையிலேயே இதயத்தில் கடுமையுடையவர்கள் தம்மை நோக்கி கடும் பண்புகளை ஈர்த்து, தம் துன்பத்துடன் அவற்றின் துன்பங்களையும் சேர்த்து நுகரு வார்கள். கடுமை, உறுதிக் கேட்டையும் மென்மை உறுதியையும் உண்டுபண்ணும் வகை இதுவே.

ஐம்மடங்கான ஐவகைத் துயர்கள்: ஐவகை இன்பங்கள்

இதயக் கடுமையால் விளையும் துன்பம் ஐந்து வகையில் மேன்மேல் அடுக்கித் துயர்விளைக்கின்றது. தன் இன உயிருக் கெதிராக இதயக் கதவடைத்து உள்ளத்தில் கடுமை வளர்த்துக் காள்ளும் ஒவ்வொருவனும் இந்த ஐந்து வகை களுக்கும் ஆளாகிறான்.

ன்னல்

முதலாவதாக, உள்ளத்தில் இன்ப வாழ்வுக்குரிய அன்பு இல்லாமையினால் துன்பம் ஏற்படுகிறது. அத்துடன் பிற உயிர் களின் தொடர்பும் கூட்டுறவுத் தோழமையின் ஆறுதலும் அவனுக்கு இல்லாமல் போகின்றன. மூன்றாவதாக, அகத்தே வளரும் வெறுப்பு முழுவதுமே செயற்பட்டுப் பிறர்மீது செல்ல முடியாமல், தன் மீது தானே மோதி உள்ளத்தில் புயலாகச் சுழித்தடித்தார்த்துக் குழப்பம் உண்டு பண்ணுகிறது. நான்காவ தாக, உணர்ச்சிக் கொந்தளிப்பிடையே பிற உயிரும் சூழலும் தனக்கெதிராவதன் காரணமாகத் தன் பெருமை புண்பட்டு வேதனை பெருக்குகிறது. கடைசியாக, பிறருக்குச் செய்த தீங்கின் பயனாக அவர்கள் பழிக்குப் பழியாக இழைக்கும் இன்னல் அவனைத் தாக்குகிறது.

மன்னித்து மறந்துவிடும் மாண்பில்லாதவர் செய்கை ஒவ் வொன்றும் இவ்வாறு ஐம்மடங்கான ஆற்றாத் துயரைச் செயல் செய்தவன்மீது பொழிகின்றது.

மன்னித்து மறக்கும் மன்பேரருள் வாய்ந்த நல்லோருக்கோ இந்த ஐந்து பொல்லாங்குகளும் இல்லாதன ஆகின்றன. அத் துடன் இவற்றிற்கு எதிராக ஐவகையான இன்ப வளங்கள் அவனைச் சுற்றித் தென்றலாக, நிலவொளியாக வீசுகின்றன.