பேரின்பச் சோலை
[201
கோபமுடையவன் எப்போதும் தன் கோபத்துக்குச் சரியான காரணம் காட்டி, அது நேர்மையான கோபமே என்று நாட்ட முனைகிறான். அவ்வாறே பேராவலுடையவன் பேராவலையும், தூய்மைக் கேடுடையவன் அப்பண்பையும் நேர்மையானவை என்று காண்பிக்கத் தவறுவதில்லை.
பொய்யன் தன் பொய் இன்றியமையாத செயல், நற்செயல் என்றுகூடக் கருதுகிறான். வசைகாரனோ தான் வெறுப்பவர் களை வைது தூற்றுவதன் மூலம் அவர்கள் வகையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை தரும் சமுதாயக் கடமையையே ஆற்றுவதாகப் பெருமை அடித்துக் கொள்கிறான். திருடன் செல்வமும் வளமும் இன்பமும் பெறத்தான் கண்டு பின்பற்றும் சுருக்குவழி, தான் திறம்பட ஆற்றும் அரும்பணியே திருட்டு என்று இறுமாப்புடன் கூறுகிறான். கொலைகாரன்கூடத் தன் செயல் நேர்மையானது, அறிவுக்குப் பொருந்துவது என்றே வாதாடுகிறான்.
ஆம்பலின் உயரம் எப்போதும் நீர்மட்டத்தின் உயரமாகவே இருக்கும். அதுபோல ஒவ்வொரு மனிதன் செயலின் பண்பும் அவன் உள்ளத்திலே இருக்கும் உளி, இருள் ஆகியவற்றின் அளவிலேயே நிற்கும். தன் அகப்பண்பு கடந்தோ, அறிவு கடந்தோ எவனும் செயலாற்றிவிட முடியாது. ஆயினும் அவன் தன்னைத் தான் திருத்திக்கொள்ள முடியும். தன் உள் இருள் குறுக்கி, உள்ளொளி பெருக்கி, தன் அறிவின் பரப்பை விரிவு படுத்தி, அதன் மூலம் செயலையும் உயர்த்திக்கொள்ள முடியும்.
கோபக்காரன் தன் கோபத்தளவு செயல் பெருக்கத்தான் எண்ணுகிறான்.ஆனால் முடிவதில்லை. இது கோபத்தின் இயல்பு. பொறுமையுடனும் அமைதியுடனும் இருந்தால், அவன் மிகுதி செயல் செய்ய முடியும். ஆனால் கோபத்தில் அவன் செய்ய நினைத்த செயல்கள் எதனையும் பொறுமை மேற் கொண்டபின் அவன் செய்யமாட்டான். இங்ஙனம் கோபத்தில் செயலும் தவறானது. ஆற்றலும் பெரிதுபோலத் தோற்றினாலும் உண்மையில் குறைவே. அது பெரிதளவு வசையிலும் ஆத்திரத்தி லுமே சிதறி விடுகிறது.கோபத்தை அடக்குமளவு நல்லாற்றலோ, பொறுமை மேற்கொள்ளும் அளவு அறிவோ அவனிடம் இருப்பதில்லை. மெல்லியல்புகளில் பயிற்சி பெறாததனால்,