உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(204

அப்பாத்துரையம் - 29

‘பகைவரை நேசிப்பாயாக' - இதுவே அன்பின் உரைகல்!

பொதுநிலைமாந்தர் தம் கருத்தைப் பிறரிடம் காணும் போது அதை நன்மை என்பர். தம் கருத்துடன் அது முரண் படும்போது அதைத் தீமையென்று கொள்வர். தன் கருத்தில் தகாக் காதல் கொண்டு அதையே அணைப்பவன், அதை மேற்கொண்டவரிடமெல்லாம் தகா அன்பும், அதை மேற் கொள்ளாதவரிடமெல்லாம் தகாப் பகைமையும் கொள்வான். இந்நிலை கண்டே நண்பர் நேசத்திலும் பகைவர் நேசம் ஆன்மிக நிலையில் உயர்வு படப் போற்றப்பட்டுள்ளது.

உன்னை

நேசிப்பவரை நீ நேசித்தால் அதில் போற்றுதலுக்கு என்ன இருக்கிறது? உன்னை நேசியாதவரை, வெறுப்பவரை, பகைவரை, நேசிப்பாயாக. வெறுப்புக்கு மாறாக நன்மை செய்து, அன்பு காட்டுவாயாக' என்ற அருள்நெறிக் கட்டளையின் பொருள் இதுவே.

சமயவாதிகளும் கட்சிவாதிகளும் தத்தம் அளவைகளின் படியே எல்லா மனிதரையும் மதிப்பிடுகின்றனர். தம் பக்கமே நேர்மையானது என்பதிலும் எதிர்ப்பக்கம் தவறானதென்பதிலும் அவர்கள் விடாப்பிடி உறுதி உடையவர்களாயிருப்பதனால், அவர்கள் ஒவ்வொருவருமே எதிர்தரப்பார் எல்லாரையும் வறுக்கின்றனர், எதிர்த்துப் போராடுகின்றனர். கண்டிக் கின்றனர், தண்டிக்கவும் கொடுமைப்படுத்தவும் முற்படுகின்றனர். ஒருவரை ஒருவர் வதைப்பதையும் கொடுமைப்படுத்துவதையும் அவர்கள் மிக நல்ல செயல்களாகவும், கட்டாயம் செய்து தீர வேண்டிய தங்கள் சமயக் கடமைகளாகவும் கொள்கின்றனர்.

தம் அறிவின் உரிமையால் பிறர் அறிவுக்கெதிராக அவர் களைக் கட்டாயப்படுத்தி அவர்களையும் தம் அறிவுக்குக் கொண்டுவரும் போலித் தெய்விகப் பணியில் அவர்கள் மனித உயிரை, மனித இனத்தின் ஒரு பெரும் பகுதியைக் கொன் றழிப்பதைக்கூடத் தவறாக எண்ணவில்லை - அவ்வழிவு கண்டு இரங்காமல், வருந்தாமல், இறுமாந்து மகிழ்கின்றனர்.

மனிதர் இவ்வாறு ஒருவரை ஒருவர் வெறுத்துக், கண்டித்து, எதிர்த்துத் துன்பவாதைகளை உண்டு பண்ணினாலும், இத்