உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. நீடின்பம்

'மாடுயர் நெஞ்சத்து இசையேந்திச் செல்லும் மதிவலவர் நீடிருள் சந்து நெருங்கும் வணிகக்களங் களிலே

நாடொறும் நைய உழைப்பினும்

நோகார், படிவிரைவார்

பீடுதரும்பண் இயைந்தாடும்

பெண்டிர் இயல்புறவே!

2அன்புநந்தா விளக்காக,

இன்பம் சேமவைப்பாக

மன்பேர் உவகை கொள்வோம் யாம்;

-கெபிள்.

மகிழ்ந்தெந்நாளும் மிதப்போம் யாம்.

வேர்ட்ஸ்வொர்த்

நிலையான இன்பம், நிலையான நீடின்பம்! அப்படி ஒன்று உண்டா? எங்கிருக்கிறது? யாரிடம் இருக்கிறது?

ஆம். நிலையான இன்பம், நீடின்பம் உண்டு. அது பழியற்ற விடத்தில் இருப்பது. தூய நெஞ்சுடையவரிடம் தங்கியிருக்கிறது.

எங்குமுள்ள பொருள் இருளல்ல, ஒளி! இருளென்பது அதன் சிறு மறைவால் இடைநிகழும் ஒரு நிழலே. அது போலவே துன்பமென்பது என்றுமுள்ள, எங்குமுள்ள பொருளன்று.

ன்பமே என்றுமுள்ளது. எங்கும் நீக்கமற நிறைவது. காற்றுப் போன்று தங்குதடையற்று நிலவுவது, உலவுவது. துன்பம் அதன் தற்காலிகச் சிறுமறைப்பால் இடைநிகழும் தோற்றம் மட்டுமே - ஏனெனில் இன்பம் மெய்ப்பொருள்; துன்பம் பொய்த்தோற்றம், போலிப் பொருள்!