உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

223

குழந்தைகளிலிருந்து, குழந்தைப் பருவத்திலுள்ள மனித னத்திலிருந்து, முதிர்வயதுடைய நாகரிக மனிதர்வரை யாவருமே தூய உடலும் உளமும் கொண்டவர்களையே தெய்வங்களாக, இன்ப எழிலுருக்களாக உருவகம் செய்து காண்கின்றனர். ஆயினும் பழங்கதைகள் கூறுவது போலவும் மக்கள் நினைப்பது போலவும் இந்த இன்பத் தெய்வங்கள் நீவேறு உலகத் தவையல்ல. பகுத்தறிவாளர் கருதுவதுபோல முழுவதும் பொய்யான கற்பனையுமல்ல. அவர்கள் சூழல் தன்னல உலகின் சூழலன்று, பொதுநலத்தின் சூழல் என்பது கருதியே அவர்கள் வேறுலகத்தவர் என்று உருவகிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் எல்லா மனிதரையும்போல ஊனுடல் தாங்கியவர்களே.

நாள்தோறும் நாம் அத்தகையவரைக் காணலாம். அவர் களுடன் பழகலாம். ஊடாடக் கூடச் செய்யலாம். உண்மையில் அவ்வாறே பழகுகிறோம், ஊடாடுகிறோம். அத்துடன் அவர்கள் நம்மையறியாமல் நம் சூழலையும் நம்மையும் மாற்றிக் கொண் டிருப்பவர்கள் ஆவர். ஆயினும் அவர்கள் நிலையை அணுகியவர் தவிர வேறு யாரும் அவர்கள் தன்மையை அறிவதில்லை. நாமும் அந்நிலையை, அணுகினாலன்றி, அவர்கள் உயர்வை உணர முடியாது.

மனிதர் இயல்பான உணர்வில் எழுந்து பழங்கதை மரபு களிலும் சமயமரபுகளிலும் இடம்பெற்றுள்ள எழில் தெய்வ உருக்கள் இவர்கள்தாம் என்றும் நாம் எண்ணுவதில்லை. ஆயினும் அவர்கள் ஆன்மிகச் செல்வாக்கு அத்தெய்வங்களுக்கு ருப்பதாகச் சொல்லப்படும் தெய்விக ஆற்றலில் குறைந்ததன்று. அந்நிலையடைந்த மனிதன் பிறரால் எவ்வாறு கருதப்பட்டாலும் மக்களிடையே ஒரு தெய்வமாகத்தான் உலவுகிறான். தற் பற்றில்லாத காரணத்தால், அவன் ஊனுடலில் இருந்தாலும், அவ்வுடற் பற்றற்றவனாய் இன்பவெளியில் உலவுகிறான். அவனைப் போலத் தூய்மையடைந்தவரே அவன் நிலையும் அவன் அகத்துறவு நிலையும் கண்டு, அவன் அக உலகாகிய மேலுலகில் சென்று அவ் அகவாழ்வு அல்லது வானுலக வாழ்வில் பங்கு பெற முடியும்.