உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

“மெய்வழியே செல்லுவீர், வெய்ய விடாயகற்றும்

விரிந்த நீரோடையங்கே திரிதருதல் காண்பீர்! தெய்வமணங்கமழும் செம்மலர்கள் எங்கும்

மெல்லியபட்டாடை விரித்ததெனவிளங்கும்! நெய்வா ரிழைபோல் விரைந்தோடும் இன்பநிறை நாள் ஓரை, ஓரைகணமாக நின் நல்வாழ்வே!

போலி அகப்பண்பு, தற்பற்று, ஆணவம்

225

நெற்பயிர் நெல்லே விளைவிக்கிறது. ஆனால் அந்த நெல்லில் பயனுடைய அரிசியும் உண்டு. அதனைப் பாதுகாத்துத் தருவதன்றி வேறு பயனற்ற உமியும் அதில் உண்டு. அதுமட்டு மன்று, உமியற்ற அரிசியில்லையானாலும், அரிசியற்ற உமி அஃதாவது பதர் நெல்லுடன் கலந்தே காணப்பெறுகிறது.பதரும் அகற்றி, அதனுடன் நெல்லிலிருந்து பிரித்த உமியும் அகற்றிய பின்பே அரிசி உணவாகப் பயன்பட முடியும்.

இதுபோன்றதுதான் வாழ்வு. வாழ்வில் பண்புகள் விளை கின்றன. அவை உளத்துக்கு நிலையான இன்பம் தருதற்குரியன. ஆனால் உமிபோன்ற புறப்பண்புகளுடனே அரிசி போன்ற அகப்பண்பும் கலந்து காணப்படுகிறது. அதுமட்டுமன்று. புறப் பண்பற்ற அகப்பண்பு இல்லையாயினும், அகப்பண்பற்ற புறப்பண்பு, போலி அகப்பண்பு உண்டு. இதுவே தற்பற்று.

புறப்பண்புகள் கடந்து அகப்பண்பு வளர்ந்தபின்கூட இப் போலிப் பண்பு, பதரான தற்பற்று அல்லது ஆணவம் நீடித்துத் தங்கியே நிற்கும். புறப்பண்புடன் இப்போலிப் பதர்ப்பண்பும் அகன்றபின்பே அகப்பண்புகளின் ஒளியாகிய இன்பம் மிளிரும்.

நெல்லிலிருந்து சாவி அல்லது பதரும் உமியும் அகற்றும் செயலை நாம் சலித்தல் என்கிறோம். அகப்பண்புகளிலிருந்து புறப்பண்புகளையும் இப்போலிப் பண்பையும் அகற்றும் செயலே துன்பம். தற்பற்றகலும்வரை துன்பம் அதை அகற்றும் கருவியாகவே இயல்கின்றது. புறப்பண்பும் தற்பற்றும் அகன்ற பின், துன்பத்தின் தேவை நீங்குகிறது. துன்பத்துக்கு இடமும் இல்லாமல் போகிறது.