(252
-
|
அப்பாத்துரையம் - 29
சரி இதைப் பிறருக்குத்தான் கூறுவார்கள். தாம் அதைப் பின்பற்றுவது தம்மியல்பாகவேயன்றி அறிவுரை கேட்டல்ல.
எவ்வளவு தவறான செயல் செய்தவனும், எவ்வளவு பழி காரனும் தனிமையில் தன் குற்றத்துக்குத் தன்னையே நோகாமல், தன்னைத்தான் குத்திக்காட்டாமல் இருப்பதில்லை.
பெரும்பழிகாரர் தனிமையை அஞ்சுவதும், மடமை நிலையில் உள்ளவர் இருள் கண்டு அஞ்சுவதும், உணர்ச்சிக் கொந்தளிப்புக்களுக்கு ஆளானவர் தம் அரைகுறைத் துயிலின் கனவுகள் கண்டஞ்சுவதும் இதனாலேயேயாகும்.
மனிதர் தனிமையிலும் இருளிலும் பேய்க் கனவுகளிலும் காணும் அகப்பேய், அவர்கள் துன்ப எல்லையில் நின்று தனிமை அவர்களைக் குத்திக்காட்டும் குற்றச்சாட்டின் உருவேயன்றி வேறன்று.
ய
தனிமை நெருக்கடிகளில்கூடத் தன்னுணர்வு கொளுத்தும் நண்பன். அதனை எண்ணி அஞ்சுபவர்கள் அத்தனிமைக்குப் போதிய வாய்ப்பளித்துத் தம்மைத் திருத்திக்கொள்ளாது, நீடித்து நாட்கடத்தி வருபவர்களே. உடலுக்கு ஓய்வு தராமல் உடலை வருத்துபவன் ஒரு நாள் உடலழிவுக்கே ஆளாகிறான். ஓய்வு தராமல் உளத்தை வருத்துபவன் ஒருநாள் மூளைக் கோளாற்றுக்கு இரையாகிறான். ஆனால் தனிமை மூலம் ஓய்வுக்கோ, தன் திருத்தத்துக்கோ இடம் தராதவன் கடைசியில் தன்னைக் காணவே தான் அஞ்சும் பேயாகிறான். அந்நிலை யடைந்தவனுக்கு வாழ்வின் திருப்பம் அளித்து, மீண்டும் தனிமையின் இன்பத்தை அவனுக்கு உண்டுபண்ணும் மருந்து அன்பு ஒன்றே.
தனிமை தரும் இன்பம் கடந்த இத்தகைய அன்பு என்ற ஒரு தெய்விகப் பண்பு இல்லாவிட்டால், அந்த அன்பை அருளாக வளர்த்துத் தெய்வ ஒளி பரப்பும், அருளாளர் இல்லாவிட்டால், உலகில் தனிமையை அஞ்சும் பேய்ப்பண்பு தளர்வுறாது, மாயாது.
தனிமை மனிதன் உள்ளத்தை மனிதன் காணும் ஒரு கண்ணாடியாக்குகிறது. தனிமையின் ஒரு கூறு, புறக்கூறு ஓய்வு. அதன் மறுகூறு, அகக்கூறு சிந்தனை, தற்சிந்தனை. தனிமை