உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256) ||

அப்பாத்துரையம் - 29

ணர்ச்சிக்குரியவையுமல்ல. சில சமயங்களில் அவர்கள் மகிழ்ச்சி நாடிப் பல்வேறு பாதைகளில் செல்கின்றனர். ஆனால் மகிழ்ச்சி நிலையாயிருப்பதில்லை, இன்பமாவதில்லை. ஏனெனில் உணர்ச்சி நீங்கிய பின்னரே மகிழ்ச்சி நிலையான இன்பம் ஆகும். அதுவும் அமைதியின் விளைவு.

விலாப்புடைக்கச் சிரிக்கும் நகைச்சுவை, கொந்தளிக்கும் மருட்சி ஆகிய உணர்ச்சிகளில் குளித்து இன்பப் போதைபெற முயல்பவர் உண்டு. ஆனால் இத்தகையவர்கள் இன்பத்துக்கு சில சமயம் உயிர்மாள்வே கைவரப் மாறாகத் துன்பமே

பெறுகின்றனர்.

-

அமைதிக்கு மாறான சூழல்களால் அமைதியின் கனியான இன்பம் எப்படிக் கிடைக்கும்?

தற்பற்று, தன்னலம் காரணமான தற்சலுகைகள் வாழ்க்கை என்னும் கரையற்ற மாகடலின் அலைகள். மனிதன் அவற்றில் மிதந்து மிதந்து ஏற்றுண்டு தவழ்கிறான். அவா என்னும் புயல்கள், ஏக்கம் என்னும் சுழல்கள் இடைவிடாது அவனை அலைக் கழிக்கின்றன. அக்கடலின் உறுதியான அடித்தளமாகிய இயற்கையுடன் பிணைக்கப்பட்ட பாறை சார்ந்த தீவத்துறையே வாய்மை அலையும் புயலும் அவ்விடம் முற்றிலும் தளர்வுற்று, அது மனிதக் கலத்துக்குரிய பாதுகாப்பான இன்பத்துறையாக இயங்குகிறது. அதை யடைந்தவன் புயல்களுக்கு, அலைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அவற்றின் நடுவே அவன் உறுதியான நிலத்தையும் அமைதிவாய்ந்த நீர்ப்பரப்பையும் தன் தங்கிடமாகக் கொள்ள முடிகிறது.

பண்புருவில் பழிகள்

புறச் செயல்களில் ஈடுபடும் சமயம் மனிதன் தன் ஆற்றல் கூறுகளைச் செலவழிக்கிறான்; இழக்கிறான். இதனால் அவன் ஆன்மிகத் தளர்ச்சியும் தேய்வும் உற்று நலிகிறான். இதைச் சரி செய்ய, அவன் ஒழுக்க ஆற்றல், ஆன்மிக ஆற்றல்களைச் சீர் செய்ய, அவன் தனிமையின் சிந்தனைக்கு இடம் தருதல் வேண்டும். இது அவன் தேவை, இன்றியமையாத் தேவை - உயிர்த் தேவை. இத் தேவையைப் புறக்கணிப்பவன், இழப்பவன், வாழ்க்கையின் மெய்யான அறிவைப் பெறமுடியாது. அதுமட்டு மன்று. பழி