உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

277

இதுபோன்றவையே. ஆகவே குறைகூறலும், பழியும் தவறான செயல்கள்கூட அல்ல, வீண் செயல்கள் ஆகும்.

உயிரின் அக இயல்பு - தற்சார்பு, பொதுமை

பிறரைச் சார்ந்து வாழ எண்ணும் அடிமை எண்ணமும் பழக்கமும் உலகைப் பீடித்துள்ள ஒரு கொடுங்கோன்மைப் பழி. இதை யாவரும் தாமே தம்மீது சுமத்திக்கொள்கிறார்கள். அது இயற்கையானதுமல்ல, யாராலும் யார் மீதும் சுமத்தப்படுவது மல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயிரும் தன் மீது தற் சார்புடன் நிற்க முடியும். உயிர் என்பதன் பொருள் அதுவே. தானே இயங்குவதே, இயக்கப்படாமல், தன் உள் ஆற்றலால், புறத்தூண்டுதலில்லாமல் அகத்தூண்டுதலாலே புறத்சூழ லுணர்ந்து இயங்குவதே உயிர். ஆனால் அதே சமயம் உயிர் மற்ற உயிர்களுடனும் சூழலுடனும் தொடர்பற்ற பண்பன்று. அதன் தற்சார்பு உலகையளாவிய தற்சார்பு, இயற்கை முழுவதும் அளாவிய தற்சார்பு.

தற்சார்பு, உலகளாவிய தற்சார்பு ஆகிய இந்த இருமைப் பாட்டைக் காட்டுவது புறமல்ல, அகம்! ஆகவே உயிரின் அகம் உயிரின் தற்சார்பையும் இயற்கையையும் ஒருங்கிணைப்பது.அதன் தற்சார்பு உண்மையில் குறுகியதன்று. பரந்த பொதுமை நிலையேயுடையது. தற்சார்பு நீங்கிப் பிறிது சார்பவன் இக் காரணத்தாலேயே தற்சார்பு மட்டும் இழந்தவனல்லன். பொதுமையையும் இவன் இழக்கிறான். ஏனெனில் பொதுமை யின் உயிர்க் கண்ணாடியே அகம்.

தற்சார்புடையவன் தன்னலத்தில் என்றும் சறுக்கா திருப்பதன் இரகசியம் இதுவே. தற்சார்புடையவனே பொது வான இனச்சார்பும் உடையவனாகிறான். பொது இனத்தின் ஒத்துணர்வே அகத்தின் அகமாகிய அன்பொளி,வாய்மை. அதன் இன்ப உருவம் பொதுமையுடன் தனிமையாக அளாவிய இன்பமே.

ஆயிரம் ஆண்களின் கூட்டம் ஒரு குடும்பம் ஆகாது. ஆயிரம் பெண்டிரின் குழாமும் அப்படியே. அவர்களிடையே எவ்வளவு நேசமிருந்தாலும் அது குடும்பப் பாசம் ஆகாது. அன்பில் இணைந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணுமே அப்பாசம்