உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. வாழ்வின் எளிய சிறு அமைதிகள் பற்றிய நுண்ணறிவு

1வாய்மையின் விளக்கம் வருந்திசை நோக்கிச் சேய்மையின் தலைநிலை தேருதி யாயின், தாய்மைகொள் அதன்முதல் உன்னுளே துளங்கும் தூய்மை என்றறிவாய் தூங்கா உளத்தே!

2கணிகொளும் இயற்கை அமைதி அருங்கலம் மணிகளின் மதிப்பினும் விலைமதிப் பரிய,

- பிரௌனிங்

நணிதுறழ் தேனிறா லதனினும் இனியது,

எணினது மகிழ்விலும் மகிழ்தரல் உரியது.

ஆசியசோதி

வாழ்வின் எளிய அமைதிகள் பற்றிய சரியான அறிவு! பேரின்பச் சோலைக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் மருங்கி லுள்ள இன்பப் பண்ணைகளிலே உலவும் இன்பவாணன் பேரின்ப எல்லையருகே தங்குவதற்குரிய கடைசியான இன்பப் பண்ணை, இன்பப் பண்ணைகள் யாவிலும் மிக முக்கியமான இன்பப் பண்ணை இதுவே.

இன்பப் பண்ணைகள் பலவற்றிலும் தங்கி, அவற்றின் அழகை நுகர்ந்து, அவற்றின் இன்ப நறுமணம் மாந்திய வண்ணம், அவன் தன் சுமைகளில் ஒவ்வொன்றாக ஒவ்வொரு பண்ணையிலும் இறக்கிக்கொண்டே வருகிறான். அவன்தன் கடைசிச் சுமையை இறக்கிவிட்டு, களைப்பு முற்றிலும் அகற்றி, ஓய்வு இனித் தேவையில்லை என்று கூறுமளவுக்கு ஓய்வின் உருவாகிய உள்ளக் கிளர்ச்சியும் உவகையும் பெற்று, தன் பயணத்தை இன்ப உலாவாகக் கொண்டு மகிழும் இடம் இதுவே.