உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

289

இயற்கையின் நேர் ஒழுங்குகள் உள்ளத்தில் மலர்ச்சி யுற்றபின் உணர்வுக் கண் திறக்கும். நேர் ஒழுங்குகள் கண்டு கருத்தும் செயலும் அவற்றைப் பின்பற்றியபின், பேரின்பப் பாதையும் நேர்பாதையாக, எளிய பாதையாகக் காட்சியளிக்கும். தயக்கமும் மயக்கமும் அதன்பின் அகலும். அறிவின் தெளிந்த நோக்கில் எல்லாம் தெள்ளிதில் பட்டாங்கமாகப் புலப்படும். வாழ்வின் அடிப்படைப் பாடங்கள்

வாய்மை ஒளியை, பேரின்பத்தை நாடிச் செல்லுபவன் பயணத்தை ஊக்கி விரைவுபடுத்தும் பண்புகள் உண்டு. அவையே நாம் மேலே குறிப்பிட்ட எளிய, சிறிய நேரொழுங்கமைதிகள். கணக்கியலின் விதிகள்போல அவை தன்னுறுதி வாய்ந்தவை. மீறத் தகாதவை. மீறுபவர்க்குத் தட்டின்றித் தடுமாற்றமும் துன்பமும் தருபவை. அவற்றின் அறிவே பேரின்பப் பாதையின் எல்லைக் கற்கள், அப்பாதையருகே இருபுறமும் உள்ள பாழ் கசங்கள் பற்றிய எச்சரிக்கைச் சின்னங்கள். அவற்றில்,

46

'முதல்பாடமே அடிப்படைப்பாடம்

முதலன, எளியன, சிறியன என்பதால் அவை என்றும் மறக்கப்படா, மறுக்கப்படா!

முதற் பாடம்: உலகம் ஒன்று

வாழ்க்கை ஒன்று. அதன் தோற்றங்களே பல. அதன் அமைதியும் ஒன்றே! வாழ்க்கையின் தோற்றங்களிடையே, படிகளிடையேதான் அதுவும் பலவகைத் தோற்ற வடிவங்கள் பெறுகிறது. பலவகைகளில் செயற்படுகிறது. ஆகவே, வழக்க மாகக் கருதப்படுவதுபோல, புறத்தே பொருளுலகுக்கு ஒரு அமைதியும், அகத்தே உள்ளத்துக்கு வேறோர் அமைதியும் கிடையாது. தோற்றுகின்ற உலகுக்கு ஓர் அமைதியும், தோற்றா உலகுக்கு மற்றோர் அமைதியும் வேறுவேறு இருப்பதாகப் பாமரமக்கள் கருதுகின்றனர்.

பாமரரின் இவ்வறியாமையைச் சமயவாணர் மேற் கொண்டதுடன் நில்லாது அதை வற்புறுத்தி மக்கள் சமய வாழ்வையே கெடுக்கின்றனர். புற உலகம், அக உலகம் என்றும்