பேரின்பச் சோலை
[291
வேண்டிய செயலை அவர்கள் கருவியாக அமைத்து தொழிலாளி செய்கிறான். இது சமுதாயத்துக்குரிய மற்றொரு கூறு. இதுவே அவற்றின் உறவு.
இதுபோன்றதே புறம், அகம் என்ற வாழ்வின் இருதிசைத்
தொடர்பு.
ஒருவனது வாழ்வின் புறம் அவன் அகத்தின் நிழலீடு. ஆனால் அகமோ மற்ற மனிதர் வாழ்வின் பொதுச் சின்னம். அவன் செயல்கள் யாவும் அந்த இனச் சார்பில் செய்யப்படும் தொழிலாளியின் செயல்போன்றதே. அகம், புறம் என்ற இந்த நெருங்கிய துண்டுபடுத்த முடியாத இணைதொடர்பை உலகியல், ஆன்மிகம் என்ற இணைவற்ற, முரண்பட்ட எதிரெதி ரான தொலைப் பண்புகளாக்கிய சமயவாணர் உண்மை ஆன்மீகப் பண்பின் நிழலையே மனித வாழ்விலிருந்து துடைத்தழித்து வருபவராவர்.
தனி மனிதன் அக வாழ்வு என்பது இனத்தின் பொது வாழ்வின் அகக்கூறு. அதன் இயக்கம் தனி மனிதன் புற வாழ் வியக்கம்.ஆனால் அதன் நன்மை தீமைகள் தனி மனிதன் வாழ்வை மட்டும் பாதிப்பதல்ல. இன முழுவதையுமே பாதிப்பது தனி ன மனிதன் அக வாழ்வு உண்மையில் அவன் புறவாழ்வைவிட இனத்தின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையது.ஏனெனில் அது இன வாழ்வை இயக்கியே தனி மனிதன் புறவாழ்வையும் பாதிக்கிறது. இத்தகைய இருதிசைப் பிணைப்புடைய, தனி மனிதனுடனும் இனத்துடனும் பின்னிப் படர்ந்துள்ள அக வாழ்வை உலகியலுடன் தொடர்பற்ற வேறோர் ஆன்மிக உலகின் வாழ்வு என்று கருதுவதுபோன்ற இருளார்ந்த மடமை வேறு இல்லை. அஃது ஆன்மிக உலகின் வாழ்வும் தனி மனிதன் வாழ்வும் மட்டுமன்றி மனித உலகின் சமுதாய வாழ்வும், அரசியல் வாழ்வும், மனித நாகரிகமும் கெட்டழிய ஏதுவாகின்றது.
உலகியல் வாழ்வுக்கு ஒரு விதி, ஆன்மிக வாழ்வுக்கு ஒரு விதி - குடும்பவாழ்வுக்கு ஒரு விதி, சமுதாய வாழ்வுக்கு வேறொரு விதி அரசியல் வாழ்வுக்கு ஒரு விதி, அரசியல் கடந்த நாடு கடந்த வாழ்வுக்கு இவற்றுக்கு முற்றிலும் மாறான ஒரு மூன்றாம் விதி - இது இன்றைய நாகரிக உலகின் அமைதியாய் இருந்து வரு கின்றது. தற்கால உலகின் கேடுகள் பலவற்றிற்கும் உரிய மூல