உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




312

அப்பாத்துரையம் - 29

அழகெலாம் நிழலாகக்கொண்ட அழகின் அழகு. மாறு படும் ஒளிகளெல்லாம் நிழலாகக்கொண்ட மாறா ஒளி, பல வகைப் பெயர்கள் கொண்ட பெயரிலா நிலை அது. எல்லையற்ற அந்த இன்ப உறைவிடத்தில் மனிதன் தன்னையிழந்து அவ் வின்பமாகி விடுகிறான்.

-

-

வாழ்விலே வாழ்வு புலன்களலைக்கும் உலகிலே புலன் கடந்த வாழ்வு இருளவாக்கள், விருப்பு வெறுப்புப் புயல் களிடையே இன்பொளி, அன்பமைதி - தன்னலவாணர் தட்டித் தடவும் உலகிலே பொதுநலத்தின் சார்புக்கனிவே கண்ணாகக் கொண்டு எத்திசையும் ஒத்துநோக்கும் நிறை மாட்சியுணர்வு - உள்ளத்தின் உள்ளே நின்று புறமியங்கும் வாழ்வு அவனது. அதில் சென்று தங்கி, இன்பவாணன் தன் பேரின்பப் பயணத்திலிருந்து நிலையான ஓய்வுபெறுகிறான்.

எல்லா உயிர்க்கும் இன்னமைதி

அவன் உள்ளம் இந்த இன்னமைதியின் ஒருகூறாய் உலகுடன் ஓர் இனிய உள்ளுலகாய் இயங்குகிறது. முடிந்த அம்முடிவில், நிறைந்த அந்நிறைவில் மிதந்து, ஆடாமல் அசை யாமல், விரையாமல் அமைதியுடன் அவன் உலகெலாம் இன்பம் பரப்பி இயக்கி இன்பத்தில் இழைகிறான். இன்ப உருஎய்தி இன்ப உருவாம் கடவுளொளியின் ஒரு கதிராய் இயங்குகிறான்.

அடிக்குறிப்புகள்

1. "Such is the Law which moves to righteousness,

Which none at last can turn aside or stay;

The heart of it is Love, the end of it

Is peace and consummation sweet. Obey."

2.

The Light of Asia.

"So haply, when thy task shall end,

The wrong shall lose itself in right, And all thy week-day Sabbaths blend

With the long Sabbath of the Light."

Whittier.