உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. சிறு கடப்பாடுகளும் கடமைகளும்

'முன்னுள்ள கடமையிலே முழுதளவும் ஆழ்ந்து முனைவதுவே வானுலக வாயிலதன் திறவாம்! முந்துற் றுளையாமல், பிந்துற் றிழவாமல் வந்துற்றார் காண்பர் திரைநீத் ததனொளியே! தங்கித் தயங்காமல் தடங்கெட விரையாமல் மங்கா ஒளி தொலைவில்

வீசும் விண்மீன்போல

அன்றன்றாட அலுவலின் சிறிய

ஆழியைத் தன்முழு ஆற்றலோ டியக்குக, என்றும் அமைதியில் இழைந்தே!

- கவிஞர் கெதே

சரியான நற்றொடக்கம் பேரின்பத்துடன் இணையறாத் தொடர்புடையது. தவறான தீத் தொடக்கமோ மாளாத் துய ருடன் இறுகப் பிணிப்புண் டிருப்பது. இத்தொடக்க விளைவு களுக்கிடையே எண்ணற்ற சிறு கடப்பாடுகளும் கடமைகளும் உள்ளன. இவையும் நற்றொடக்க நல்விளைவுகளுடனோ, தீத் தொடக்கத் தீவிளைவுகளுடனோ நீக்கமற்ற நெருங்கிய

தொடர்புடையவையாகும்.

கடமையும் கடப்பாடும் தனிப்படத் தம்மளவில் நன்மையோ தீமையோ, இன்பமோ துன்பமோ விளைவிப்பவை அல்ல. அது அக்கடமையையோ, கடப்பாட்டையோ மேற்கொள்பவர் அவற்றின் வகையில் கொள்ளும் மனநிலையையும் மனப் போக்கையுமே பொறுத்ததாகும். செயலின் முடிவான விளைவு அச்செயலையோ, அதன் தற்காலிக வெற்றி தோல்விகளையோ கூடப் பொருளாகக் கொண்டதன்று. அதனை அணுகுபவர் மனப்பண்பை மட்டுமே சார்ந்தது.