உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

47

முடியும். ஆனால் இந்த அணுக்களிலிருந்தும் கணுக்களிலிருந்தும் முழுமொத்தம் எழுகிறது. அணுவணுவாக நீ உயர்ந்த, பெருமித வாழ்வு வாழமுடியும். முழுமொத்தமாக வாழ முடியாது. ஆனால் அணுவணுவாக நீ பெருமித வாழ்வு வாழ்ந்துவிட்டால், மொத்தமான பெருமித வாழ்வு தானாய் அமைந்துவிடும். அணுக்களில் நீ பெருமைக்கு இடம் கொடுக்கவில்லையானால், மொத்த வாழ்வில் பெருமை ஒருபோதும் தலைகாட்ட முடியாது. கணத்தில் ஊன்றிய கருத்தே காலத்தை

ஆட்கொள்ளும் கருத்து!

'செப்புக் காசுகள்பற்றி நீ கவனம் செலுத்தினால் போதும், தங்கக்காசுகள் பற்றிக் கவனம் செலுத்தத் தேவையில்லை. அவை தாமாகவே தம்மைக் கவனித்துக் கொள்ளும்' (Take care of the pence, the pounds will take care of themselves) என்ற ஆங்கிலப் பழமொழி பொருளியல் சார்ந்த பழமொழி மட்டுமல்ல. அகவாழ்வியல் அல்லது ஆன்மீக வாழ்விலும் அது முற்றிலும் உண்மையானதே.

நிகழ்காலத்தின் சிறுகணம், உன்முன் ஒரு நொடி நின்று மறு நொடி அப்பாற் சென்றுவிடும். அதுவே செப்புக்காசு. நீ அதை முற்றிலும் வென்று ஆண்டால் போதும். அதுவே தொடக்கமற்ற நெடுநீளமான இறந்தகாலத் தொகுதிகளாய் வெள்ளிக் காசாகத் தானாகப் பெருகிவிடும். அதுமட்டுமன்று. அதுவே முடிவற்ற நெடுநீளமான எதிர்காலத் தொகுதிகளாய்ப் பொன்காசுகளாக உன் வருங்கால வாழ்வை உருவாக்கும். மெய்யறிவு அல்லது தெய்வீக அறிவு பெறும் வழி இதுவே. கணத்திலூன்றிய கருத்தே காலத்தை ஆட்கொள்ளும் கருத்தாக ஒளிரும். காலமும் இடமும் சூழலும் படைத்தளித்துத் துடைக்கும் ஆற்றல் சான்று ‘கருத்தன்’, ‘கருத்தா’ அதுவே!

பெருங் காரியங்கள், புகழ்க்காரியங்கள் வருவதை எதிர் பார்த்துக் கணங்களைச் சிறு காரியங்களுக்குரியன என்று கழியவிடாதே. அப்படிச் செய்பவனிடம் பெருங் காரியங்கள், புகழ்க்காரியங்கள் அணுகமாட்டா -அணுகினும் அவன் கண்ணை மறைத்துக் கடுகி அப்பாற் கடந்து விடும். அவை கருத்தில்